இரண்டாம் இராசராச சோழனும்
அவன் தேவியும்
பற்றிய பாடல்கள்
கண்டன்
சோமன்
என்று பாடலில் குறிக்கப்படுபவன் இரண்டாம் இராசராசன்.
காடு மீனம் படக் கண்ட நம் கண்டன் வேல்
கோடு மேயும் துறைத் தொண்டி இக் கோனகர்
தேடு நீடும் கொடி தெரிய நாம் உய்ய வந்து
ஆடுமே பாடுமே அன்னமே இன்னமே.
முத்து பிறக்கும் சங்குகள் மேயும் தொண்டி நகரில் கண்டன் வேலும், தேரில் கட்டிய அவன் கொடியும் தெரிகின்னறன. அவற்றைக் கண்ட இந்த அன்னம் ஆடிப்பாடி மகிழ்கிறாள். (தோழி சொல்கிறாள்)
மலையினும் கானினும் போயினார் வருவரே
முலையின் மேல் பசலை போய் முதல் நிறம் கொள்ளுமே
துலை இலங்கிய கொடைச் சோமன் வாழ் புவனையில்
தலை இலங்கிய தடத்து அன்னமே இன்னமே.
தோழி தலைவியைத் தேற்றுகிறாள். கொடை வழங்கும் சோமன் வாழும் புவணைநகரில் தலிவிரி கோலத்தில் இருக்கும் அன்னமே! மலையும் காடும் மண்டிய காட்டு வழியில் சென்ற அவர் விரைவில் வந்துவிடுவார். வாடும் உன் முலையில் உள்ள பசலை நிறம் மாறி, பழைய நிறத்துக்கு வந்துவிடும்.
மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு,
12 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், பக்கம் 315
No comments:
Post a Comment