அவ்வை மணம் முடித்து வைத்த அங்கவை சங்கவை என்போர் சங்ககாலப் பாரிமகளிர் அல்லர்.
சங்ககாலப் புலவர் கபிலர் பாரிமகளிரை அரசர்கள் யாரும் திருமணம் செய்துகொள்ளாததால் திருக்கோவலூரில் வாழ்ந்த பார்ப்பான் ஒருவனிடம் ஒப்படைத்தார் என்று புறநானூற்றுக் கொளுக் குறிப்பு ஒன்று குறிப்பிடுகிறது.
அங்கவை சங்கவை இருவரும் பாரிசாலன் என்பவனுடைய மகள்கள். பாரிசாலன் சிங்கள மன்னன். இதனைத் தெரிவிக்கும் பாடல்:
சிங்களம் எனும் தேயம் முழுதாளும் மன்னவன்
சிறந்த பேர் பாரிசாலன்செய்யும் மெய்த் தவத்தால் உதித்து நல் குணம் மேவும்சிறுமி அங்கவை சங்ஙகவை
மங்கைர்கள் இருவரை வளர்த்து எடுத்து அவ்வையார்
மா முகக் கணபதி கையால்மண ஓலை எழுதி மும் மன்னரைக் கோவலூர்வரவழைத்து அறுகு இடற்குத்
தங்கிப் பணந்துண்ட மரமாகியே பழம்
தர நதிப் பெண்ணை நெய் பால்தானாய் வரப் பாடியப் பெண்களைத் தெய்விகத்தலைவன் மணம் புரியவே
அங்கு உதவும் அவ்வை தொழும் ஐங்கரன் தந்தையே
அருள் பெறு வசந்தராயர்அண் நாவினில் துதி செய் உண்ணாமுலைக்கு உரியஅண்ணாமலை தேவனே.
இது அண்ணாமலைச் சதகத்தில் உள்ள பாடல்.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 357
No comments:
Post a Comment