Pages

Tuesday, 11 November 2025

ஆசிரியர்க்க To the teacher

தொல்காப்பியம் பயன்படுத்தும் சொற்களில் நாம் எண்ணத்தக்கது ‘ஆசிரியர்க்க’ என்னும் சொல்.

இது இரண்டு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  

தொல்காப்பியருக்கு முன் தமிழுக்கு மொழிநூல் செய்த ஆசிரியர்களை ‘ஆசிரியர்க்க’ (ஆசிரியர்க்கு) என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். 

‘கு’ - நான்காம் வேற்றுமை உருபு
ஒலி நலத்துக்ககாக இது அகரம் ஏறிக் ‘க’ என வந்துள்ளது.  

அகம் கை என்னும் 2 சொற்களையும் சேர்த்து எழுதும்போது அங்கை என வருதலை எனக்கு முன் தமிழைப்  பற்றிச் சொன்ன ஆசிரியர்கள் தடுக்கவில்லை என்கிறார் தொல்காப்பியர்.  

அகம் என் கிளவிக்கு கை முன் வரினே
முதல்நிலை ஒழிய முன்னவை கெடுதலும்
வரை நிலை இன்றே ஆசிரியர்க்க
மெல்லெழுத்து மிகுதல் ஆ-வயினான
எழுத்ததிகாரம் புள்ளிமயங்கியல் 20

எண்ணிக்கையைக் குறிக்கும் சொற்கள் ஆறு, ஏழ், எட்டு என்று இருந்தன. 
ஏழ் எனத் தொல்காப்பியர் காலத்தில் வழங்கிய சொல்லை இக்காலத்தில் ஏழு என்கிறோம். 

எழுநிலை மாடம் என்கிறோம்.
எழுகலம் (கலம் என்பது அளந்து கட்டிய நெல் முதலானவை)
எழுகழஞ்சு (கழஞ்சு என்பது நிறுத்தல் அளவை)
எழுமூன்று (7, 3 இரண்டையும் பெருக்கிவரும் தொகை)

அளவும் நிறையும் எண்ணும் வரு வழி
நெடு முதல் குறுகலும் உகரம் வருதலும்
கடி நிலை இன்றே ஆசிரியர்க்க
எழுத்ததிகாரம் புள்ளிமயங்கியல் 94

No comments:

Post a Comment