Pages

Tuesday, 11 November 2025

அகம் புறம் அகப்புறம் Akam puṟam akappuṟam

பாட்டும் தொகையுமாகப் பகுத்துக் காட்டப்பட்டுள்ள 18 சங்கநூல்களில் 
  • அகப்பொருள் பாடல்கள் 1854
  • புறப்பொருள் பாடல்கள் 505
  • அகப்புறப் பொருள் பற்றிய பாடல்கள் 71
மொத்தத்தில் 3-ல் 2 பங்கு பாடல்கள் காதலின்ப வாழ்க்கை பற்றியாயவை. 

வாழ்வியலைச் சொல்லும் பாடல்களைத் தமிழர் அகம் புறம் எனப் பகுத்துக் கண்டனர். 
  • பிறர் முன்னிலையில் செயல்படாத ஆண்பெண் இன்ப வாழ்க்கையை அகம் என்றனர்.
  • பிறர் காணுமாறு வாழும் வாழ்க்கையைப் புறம் என்றனர். 
  • மனத்திலும், வெளியிலும் கண்டு போற்றும் கடவுள் வாழ்த்துப் பாடல்களை அகப்புறம் என்றனர். 
சங்கப்பாடல் என்று கொள்ளப்படுவது பத்துப்பாட்டு,, எட்டுத்தொகை நூல்கள். 

எட்டுத்தொகையில்  


அகப்பொருள் பாடல்கள் - 1850
  • நற்றிணை - 400
  • குறுந்தொகை - 400
  • ஐங்குறுநூறு - 500
  • கலித்தொகை - 150
  • அகம் - 400
புறப்பொருள் பாடல்கள் - 500
  • புறம் - 400
  • பதிற்றுப்பத்து - 80 (100-ல்)
அகப்புறப் பாடல்கள் - 70
  • பரிபாடல் - 22 (70-ல்)

பத்துப்பாட்டில்


புறப்பொருள் பாடல்கள் - 5
  1. பொருநராற்றுப்படை
  2. சிறுபாணாற்றுப்படை
  3. பெரும்பாணாற்றுப்படை
  4. மதுரைக்காஞ்சி
  5. மலைபடுகடாம்
அகப்பொருள் பாடல்கள் - 4
  1. முல்லைப்பாட்டு
  2. நெடுநல்வாடை
  3. குறிஞ்சிப்பாட்டு
  4. பட்டினப்பாலை
அகப்புறப் பாடல் - 1
  1. திருமுருகாற்றுப்படை 

No comments:

Post a Comment