களப்பிரர் என்று கூறப்படும் இனத்தவர் கி பி 3-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் நுழைந்து 6-ஆம் நூற்றாண்டு வரையில் பாண்டிய நாட்டுப் பகுதியை ஆட்டிப் படைத்தனர்.
5-ஆம் நூற்றாண்டுக்குப் பின் இறையனார் களவியல் நூல் தோன்றும் வரையில் சங்ககாலத்தில் இருந்த அகப்பொருள் பாடல்களின் செல்வாக்கு மறைந்தது. பெண்ணின்பம் அழிவைத் தரும் என்பது களப்பிரர் கோட்பாடு.
2-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரம் காட்டும் முத்தமிழில் இசைச்தமிழும் நாடகத்தமிழும் இவர்களால் மங்கிப்போயிற்று.
சங்கப் பாடல்களில் குறிப்பாக, பரிபாடல், கலித்தொகை ஆகியவற்றில் இதிகாசக் கதைகள் சில இடங்களில் உள்ளன. மற்றபடி சங்கப்பாடல்கள் சமயச் சார்பு இல்லாதவை.
சிலப்பதிகாரம் சமண நூல். மணிமேகலை பௌத்த நூல். இந்த மதங்களின் தாக்கம் களப்பிரர் காலத்தில் இருந்தது.
நீதிகளைக் கூறும் 18 கீழ்க்கணக்கு நூல்கள் (திருக்குறள் மட்டும் கி மு 31-ல் தோன்றியது) இவர்கள் காலத்தில் எப்படியோ தோன்றின.
7-ஆம் நூற்றாண்டில் அப்பரும் சம்பந்தரும் தோன்றி சைவத்தை வளர்த்தனர். ஆழ்வார்கள் வைணவ மாலியத்தை வளர்த்தனர். இவர்களால் தமிழிசைப் பாடல்கள் பாடப்பட்டன.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 2, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 2
No comments:
Post a Comment