பண்டைய காலத்தில் கருத்துகளைப் பனை-ஓலையில் எழுதினர்.
நூற்பா (சூத்திரம்) வடிவில் இலக்கணங்களையும்
ஓசை வடிவப் பாவில் இலக்கியங்களையும்
பாடும் பண்ணிசைப் பாடல் வடிவில் சமயக் கருத்துகளையும்
பதிவாக்கி வைத்தனர்.
இந்த இலக்கண, இலக்கிய, சமய நூல்கள் பாட்டாக உள்ளன.
பாட்டு எளிய மக்களுக்குப் புரிவது கடினம்.
கருத்துகள் பொதுமக்களுக்குப் போய்ச் சேர வேண்டும்.
எனவே, பாட்டுக்கு உரை எழுதும் மரபு தமிழில் தோன்றியது,
இந்த வகையில் தோன்றிய முதல் உரைநூல் நக்கீரர் இறையனார் களவியல் உரை. இது 8-ஆம் நூற்றாண்டில் தோன்றி 10-ஆம் நூற்றாண்டில் பதிவேறிற்று.
அடுத்து 11-ஆம் நூற்றாண்டில் இளம்பூரணர் எழுதிய தொல்காப்பிய உரை. சுமார் 1500 ஆண்டுகள் எங்கோ மறைந்திருந்த தொல்காப்பியத்தை இவர் கண்டறிந்து தமிழ் இலக்கணம் மக்களுக்குப் பயன்படவேண்டும் என்று அதற்கு உரையும் எழுதினார்.
11-ஆம் நூற்றாண்டில் இளம்பூரணர் உரைநூலுக்கு முன்னர் யாப்பருங்கலம் என்னும் யாப்பியல் நூலுக்கு விருத்தியுரை ஒன்று தோன்றியிருந்தது.
பின்னர் 15-ஆம் நூற்றாண்டு வரையில் பல உரைநூல்கள் தோன்றின.
இலக்கண உரைகள்
- தொல்காப்பியத்துக்கு 6 பேர் அவ்வப்போது எழுதிய உரைகள்
- யாப்பருங்கல விருத்தியுரை
- வீரசோழிய உரை
- வச்சணந்தி மாலை உரை
- நம்பியகப்பொருள் உரை
- நன்னூல் உரை
- புறப்பொருள் வெண்பாமாலை உரை
- நேமிநாத உரை
இலக்கிய உரைகள்
- திருக்குறள் உரைகள் (மணக்குடவர் உரை முதலில் தோன்றியது)
- எட்டுத்தொகை நூல்களுக்கு எழுதப்பட்டுள்ள உரைகள்
- உரையாசிரியர்களில் சிறப்புக்கு உரியவர் நச்சினார்க்கினியார். இவர் பல நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்.
- தொல்காப்பியம்
- சிந்தாமணி
- பத்துப்பாட்டு
- கலித்தொகை
சமயப் பாடல்களுக்கு உரைகள்
வைணவம்
- நாலாயிரப் பிபந்தங்களுக்குத் தோன்றிய உரைகள்
- இராமானுசர் காலத்தில் நம்மாழ்வானின் திருவாய்மொழிக்கு, திருக்குருகைப்பிரான் வியாக்கியானம் (தமிழில் வடசொல் கலந்த மணிப்பிரவாள நடை)
- மணவாள மாமுனி பெரியாழ்வார் திருமொழி உரை (15-ஆம் நூற்றாண்டு)
சமணம்
- நீலகேசி உரை (மணிப்பிரவாளம்)
சைவம்
- சிவாக்கிரயோகி செய்த சைவ சாத்திர உரை (16-ஆம் நூற்றாண்டு) (மணிப்பிரவாளம்)
- திருக்கோவையார் உரை
- இருபா இருப்பது நூலுக்கு சிவப்பிரகாசர் எழுதிய சித்தாந்த சாத்திர உரைகள்
ஆசிரியரே எழுதிய உரைகள்
- தண்டியலங்காரம் (ஆசிரியரே மேற்கோள் பாடல்களாகத் தரும் உரை)
- தமிழ்நெறி விளக்கம்
- நம்பியகப்பொருள் விளக்கம்
- இலக்கண விளக்கம்
- பிரயோக விவேகம்
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 2, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 3
No comments:
Post a Comment