Pages

Friday, 14 November 2025

இலக்கியத்துக்கு உரைநூல்கள்

8-ஆம் நூற்றாண்டுக்கு முன் உரைநூல்கள் தோன்றவில்லை. 

யார் எந்த நூலுக்கு எப்போது உரை எழுதினார்; அவர் எந்த சமயத்தைச் சார்ந்தவர் என்னும் செய்திகளை இங்குக் காணலாம்.

10-ஆம் நூற்றாண்டில் 

  1. சமண மதத்தவரான  மணக்குடவர் திருக்குறளுக்கு உரை எழுதினார்.

11-ஆம் நூற்றாண்டில்

  1. சைவ மதத்தவரான அரும்பத உரைகாரர் சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதினார்.
  2. சைவ மதத்தவரான அரும்பத உரைகாரர் சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதினார்.
  3. சைவ மதத்தவரான பரிப்பெருமாள் திருக்குறளுக்கு உரை எழுதினார்.

12-ஆம் நூற்றாண்டில்

  1. சைவ மதத்தவரான பழைய உரைகாரர் புறநானூற்றில் 265 பாடல்களுக்கு உரை எழுதினார்.
  2. சைவ மதத்தவரான அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதினார்.
  3. சைவ மதத்தவரான பழைய உரையாசிரியர் திருக்கோவையாருக்கு உரை எழுதினார்.

13-ஆம் நூற்றாண்டில்

  1. காலிங்கர் திருக்குறளுக்கு உரை எழுதினார்.
  2. வைணவ சமயத்தவரானபரிமேலழகர் திருக்குறளுக்கு உரை எழுதினார்.
  3. பரிபாடல்களுக்கு உரை ஒன்று உண்டு
  4. சைவ சமயத்தவரான பழைய உரையாசிரியர் திருமுருகாற்றுப்படைக்கு உரை எழுதினார்.
  5. பழைய உரையாசிரியர் ஐங்குறுநூறு பாடல்களுக்கு உரை எழுதினார்.
  6. பழைய உரையாசிரியர் அகநாநூறு பாடல்களுக்கு உரை எழுதினார்.
  7. பழைய உரையாசிரியர் பதிற்றுப்பத்து பாடல்களுக்கு உரை எழுதினார்.
  8. பதுமனார் என்னும் சைவர் நாலடியாருக்கு உரை எழுதினார்.
  9. தருமனார் என்னும் சைவர் நாலடியாருக்கு உரை எழுதினார்.
  10. விளக்க உரைகாரர் நாலடியாருக்கு உரை எழுதினார்.
  11. சைவ சமயப் பேராசிரியர் திருக்கோவையாருக்கு உரை எழுதினார். 
  12. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுக்கு இந்த நூற்றாண்டில் பல உரைகள் தோன்றின.

14-ஆம் நூற்றாண்டில்

  1. சைவர் நச்சினார்க்கினியர் பத்துப்பாட்டு, கலித்தொகை, சிந்தாமணி ஆகிய நூல்களுக்கு உரை எழுதினார். 
  2. சமண சமய திவாகர வாமன முனிவர் நீலகேசி நூலுக்கு உரை எழுதினார்.

15-ஆம் நூற்றாண்டில்

  1. சைவ சமய பழைய உரையாசிரியர் தக்கயாப் பரணிக்கு உரை எழுதினார்.
  2. பரிதியார் என்னும் சைவர் திருக்குறளுக்கு உரை எழுதினார்.

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 2, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 5, 6, 7 அட்டவணை  

No comments:

Post a Comment