Pages

Friday, 14 November 2025

இலக்கண உரைநூல்கள்

8-ஆம் நூற்றாண்டுக்கு முன் உரைநூல்கள் தோன்றவில்லை. 

நூற்பா வடிவில் இருந்த இலக்கண நூல்களுக்கு உரைநூல்கள் பல தோன்றின. 
அவற்றைச் செய்தவர் யார்; எப்போது செய்தார்; செய்தவர் எந்த சமயத்தவர் என்பனவற்றை இங்குக் காணலாம். 

8-ஆம் நூற்றாண்டு

  1. இறையனார் என்பவரால் எழுதப்பட்ட களவியல் என்னும் நூலுக்கு நக்கீரர் என்னும் சைவர் உரை சொன்னார். 

9-ஆம் நூற்றாண்டு 

  1. தமிழ்நெறி விளக்கம் என்னும் நூலை எழுதியவர் தாமே அந்த நூலுக்கு உரையும் எழுதினார். 

10-ஆம் நூற்றாண்டு

  1. நீலகண்டனார் என்னும் சைவர் இறையனார் களவியலுக்கு நக்கீரர்  செய்த உரையை எழுதிவைத்தார். 
  2. ஆத்திரேயன் பேராசிரியர் என்னும் சைவர் தொல்காப்பியம் பொதுப்பாயிரம் பகுதிக்கு  உரை எழுதினார். 

11-ஆம் நூற்றாண்டு

  1. யாரோ ஒரு சமணர் யாப்பருங்கலம் என்னும் நூலுக்கு விருத்தியுரை எழுதினார். 
  2. குணசாகரர் என்னும் சமணர் யாப்பருங்கலக்காரிகை நூலுக்கு உரை எழுதினார். 
  3. இளம்பூரணர் என்னும் சமணர் தொல்காப்பியம் நூல் முழுமைக்கும் உரை எழுதினார். 

12-ஆம் நூற்றாண்டு

பெருந்தேவனார் என்னும் சைவர் வீர்ரசோழியம் என்னும் நூலுக்கு உரை எழுதினார். 

13-ஆம் நூற்றாண்டு

  1. உரையாசிரியர் எனக் குறிப்பிடப்படும் ஒருவர் வச்சணந்திமாலை என்னும் நூலுக்கு உரை எழுதினார். 
  2. பேராசிரியர் எனப் போற்றப்படும் சைவர் தொல்காப்பியம் பொருள்-பால் பகுதிக்கு உரை எழுதினார்.
  3. இராச பவித்திரப் பல்லவதரையர் என்பவர் அவிநயம் என்னும் நூலுக்கு உரை எழுதினர். அந்த நூலும், உரையும் கிடைக்கவில்லை. சில நூற்பாக்களும் உரையும் கிடைத்துள்ளன. 
  4. சேனாவரையர் என்பவர் தொல்காப்பியம் சொல்லதிகாரம் பகுதிக்கு மட்டும் உரை எழுதினார். 
  5. நாற்கவிராச நம்பி என்னும் சமணர் நம்பியகப்பொருளுக்கு உரை எழுதினார். 

14-ஆம் நூற்றாண்டு 

  1. மயிலைநாதர் என்னும் சமணர் நன்னூலுக்கு உரை எழுதினார். 
  2. உரையாசிரியர் எனக் குறிப்பிடப்படும் ஒரு சைவர் களவியல் காரிகை என்னும் நூலுக்கு உரை எழுதினார். 
  3. நச்சினார்க்கினியார் என்னும் சைவர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதினார். 

15-ஆம் நூற்றாண்டு

  1. கல்லாடர் என்னும் சைவர் தொல்காப்பியம் செல்லதிகாரம் பகுதிக்கு மட்டும் உரை எழுதினார். 
  2. பழைய உரையாசிரியர் எனக் குறிப்பிடப்படுபவர்  தொல்காப்பியம் செல்லதிகாரம் பகுதிக்கு மட்டும் உரை எழுதினார்.
  3. தெய்வச்சிலையார் என்பவர் தொல்காப்பியம் செல்லதிகாரம் பகுதிக்கு மட்டும் உரை எழுதினார்.
  4. சாமுண்டிதேவ நாயகர் என்பவர் புறப்பொருள் வெண்பாமாலை நூலுக்கு உரை எழுதினார். 
  5. உரையாசிரியர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள ஒருவர் நேமிநாதம் நூலுக்கு உரை எழுதினார். 

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 2, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 5, 6, 7 அட்டவணை 
 

No comments:

Post a Comment