Pages

Friday, 7 November 2025

ஒட்டக்கூத்தரின் எளிய நடை Simple style

தேவர்கள் கயிலை சென்றனர். அரக்கர்களின் கொடுமையிலிருந்து தம்மை விடுவித்துக் காக்குமாறு வேண்டுகின்றனர். 

அவர்கள் இப்படிச் சிவனைப் போற்றுகின்றனர். 
ஒட்டக்கூத்தர் எளிய நடையிலும் பாட வல்லவர் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. 
 
எந்தாய் போற்றி ஏறு ஏறும் இறைவா போற்றி ஏழு உலகும்
தந்தாய் போற்றி அணி கொன்றைத் தாராய் போற்றி சகம் உய்ய
வந்தாய் போற்றி வஞ்சகர் முன் வாராய் போற்றி மலரோனும்
செந்தாமரைக் கண் திருமாலும் ஆனாய் போற்றி சிவ போற்றி

அவர்கள் அங்கிருந்து வைகுந்தம் சென்று திருமாலை வேண்டுகின்றனர். 

உறப் பெரிது உணரின் உருவாய் அருவாய்
உளவுமாய் இல்லையும் ஆகிப்
பிறப்பிலி ஆகிப் பிறத்தி நீ ஆண் பெண்
அலி எனப் பேசவும் படைத்தாய்
மறப் பகை ஒன்றும் அன்றியே என்றும்
வலிகொள் பஞ்சாயுதம் எடுத்தி
அறச் சிலுகு உடைத்து நின் திறம் உரைக்கின்
அச்சுதா யார் உனை அறிவார். 

  • பிறப்பு இல்லாதவனாகிப் பிறந்தவன் 
  • மறப் பகை இல்லாமல் அறப் பகை கொண்டு ஆயுதம் ஏந்தியவன்
 என்று கூறும் இடங்களில் புதிய விளக்கங்கள் புலப்படுகின்றன.


ஒட்டக்கூத்தர் இராமாயணம் உத்தரகாண்டம் நூலில் உள்ள பாடல் இது. 

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 325

No comments:

Post a Comment