Pages

Saturday, 8 November 2025

பங்காளிச் சண்டை Partner fight

அண்ணன் தம்பியர் சண்டையைப் பங்காளிச் சண்டை என்று கூறுவர்.  

இராமாயணக் கதையில் இராவணனும் குபேரனும் சண்டையிட்டுக்கொண்டனர். 

இவர்கள் எப்படி அண்ணன் தம்பியர் என்பதை உத்தர காண்டம் இராமாயணக் கதை சொல்கிறது. 

விசுவாவசு முனிவர்


விசுவாவசு முனிவர் தவம் செய்துகொண்டிருந்தார். அவர் தன்னை யாரும் மயக்கிக் காம வலையில் வீழ்த்தாமல் இருக்க வேண்டும் என விரும்பினார். அதற்காக அவர் ஒரு வாக்கால் ஆணை பிறப்பித்திருந்தார். 

அவரைப் பொறுத்தவரையில் அது சாபம். தன்னைச் சுற்றி எல்லை கோலி, அந்த எல்லைக்குள் வரும் பெண் யாராய் இருந்தாலும் கற்பவதி ஆகவேண்டும் என்பது அவர் சாபம். 

கற்பவதிப் பெண் காமத்தில் தன்னை மயக்கமாட்டாள் என்று அவர் எண்ணியிருந்தார். 

பந்து விளையாடிய பெண் ஒருத்தி (வரவர்சினி) பந்துக்காக அவர் எல்லைக்குள் நுழைந்துவிட்டாள். அதனால் அவள் 4 மாதக் கர்ப்பிணி ஆகிவிட்டாள். 

அவளது உற்றார் உறவினர்கள் அவளை அந்த முனிவருக்கே திருமணம் செய்து வைத்தனர். 

குபேரன்


இந்தக் கருப்பத்தில் பிறந்தவனே குபேரன்.

அக்காலத்தில் இலங்கையை அரக்கர்கள் ஆண்டுகொண்டிருந்தனர். அவர்களிடமிருந்து குபேரன் இலங்கையைக் கைப்பற்றி ஆண்டுகொண்டிருந்தான். 

போரின்போது குபேரனிடம் தப்பிய அரக்கன் ஒருவன் தன் மகளை (கைகாசி) அந்த விசுவாவசு முனிவருக்குத் திருமணம் செய்து வைத்தான். 

இராவணன்


முனிவன் இசைவின்றிச் சினத்துடன்  அவளுடன் உறவு கொண்டதால் இராவணன், கும்பகர்ணன் மற்றும் இரண்டு பேர் தகாத அரக்கர்களாகப் பிறந்தனர். 

முனிவன் மனைவி கணவனை வேண்டிக்கொண்டபடி பிறந்த கடைசி மகன் வீடணன். இவன் மட்டும் நல்லவன். 

பங்காளி


முனிவனுக்கு இரண்டு மனைவி. அவர்களுக்குப் பிறந்த 6 ஆண் பிள்ளைகள் பங்காளிகள். பங்காளிச் சண்டையில் இராவணன் குபேரனிடமிருந்து இலங்கையைக் கைப்பற்றினான். 

முனிவன் மனைவி முனிவனை வேண்டிக்கொண்டபடி முனிவனுக்குப் பிறந்தவள் சூர்ப்பனகை. 

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 331

No comments:

Post a Comment