திருமாவளவன் வடநாட்டு அரசர்களை வென்றுகொண்டு சென்றான்.
அப்போது அவனது ஆசை நிறைவேறவில்லை. காரணம் இமயமலை அவனது பகையை விலக்கியது.
அதனால் சினம் கொண்ட திருமாவளவன் தேவர்கள் வாழ்விடமாகக் கொண்ட அந்த இமயமலையின் பிடரியில் தன் புலிச் சின்னத்தை (கொடுவரி) பொறித்தான்.
பின் திரும்பி வரும்போது வச்சிர நாட்டு அரசன் திருமாவளவனைப் போற்றிப் புகார் நகருக்கு வந்து திருமாவளவனின் வெற்றியை விளக்கும் அடையாளமாக ‘கொற்றப் பந்தல்’ அமைத்துக் கொடுத்தான்.
அந்தக் கொற்றப் பந்தலிலும் பொங்கலிடும் அரும்பலி நடைபெற்றது.
இதனைக் குறிப்பிடும் பாடல் பகுதி:
மா நீர் வேலி வச்சிர நல் நாட்டுக்
கோன் இறை கொடுத்த கொற்றப் பந்தரும்,
மகத நல் நாட்டு வாள் வாய் வேந்தன்
பகைப்புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும்,
சிலப்பதிகாரம் - 5 இந்திர விழவு ஊர் எடுத்த காதை.
வச்சிர நாடு பற்றி அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார்.
சோணை (யமுனை) ஆறு பாயும் நாடு வச்சிர நாடு.
வச்சிரம் அவந்தி மகதமொடு குழீஇய
சித்திர மண்டபம்
சிலப்பதிகாரம் நடுகல் காதை
இந்தக் குறிப்பாலும் வடநாட்டு அரசர்கள் கரிகாலன் திருமாவளவனுக்கு, புகார் நகரில் உருவாக்கித் தந்த மண்டபம் பற்றி அறியலாம்.
No comments:
Post a Comment