Pages

Saturday, 22 November 2025

புறகு

புறகு என்னும் சொல்லுக்கு முதுகுப்பக்கம் என்பது பொருள். 
இச்சொல் பெரியபுராணம் நூலில் 2 முறை ஆளப்பட்டுள்ளது.. 

கோயிலுக்குச் சென்றால் முதலில் கோயிலில் இருக்கும் அடியவர்களை வணங்க வேண்டும். 
அதன் பின்னர்தான் இறைவன் திருமேனியை வழிபட வேண்டும். 
இது வழிபாட்டு முறைமை. 

மலைநாட்டிலிருந்து வந்த விறன்மிண்டர் என்னும் தொண்டர் திருவாரூர் கோயிலில் வழிபட்டுக்கொண்டிருந்தார். 
அப்போது வன்தொண்டர் என்று போற்றப்படும் சுந்தரர் கோயிலுக்கு வந்தார். 

அவர் சிவனடியார் எவரையும் கண்டுகொள்ளாமல் குறுக்கு வழியில் சென்று சிவனை வழிபட்டார். 
இதனைக் கண்ட விறல்மிண்டர் வன்தொண்டனுக்குப் புறகு என்று சொல்லிவிட்டு அவரைப் பார்க்காமல் அவர் இருந்த பக்கம் தன்  முதுகைக் காட்டிக்கொண்டு நின்றார். 

சிவன் சுந்தரருக்கு அருள் வழங்கினார். 
அதனால் விறல்மிண்டர் சிவன்மீதும் சினம் கொண்டார். 

சிவனுக்கும் புறகு எனச் சொல்லிக்கொண்டு சாமி இருந்த பக்கம் முதுகைக் காட்டித் தன் முகத்தைத் திருப்பிக்கொண்டார். 

இந்த 2 இடங்களில் புறகு என்னும் சொல் முதுகைக் காட்டல் என்னும் பொருளில் வந்துள்ளது. 

இந்தச் சொல்லாட்சியைக் காட்டும் பாடல்கள் இவை.   

திருவார் பெருமை திகழ்கின்ற தேவ ஆசிரியனிடை பொலிந்து
மருவா நின்ற சிவனடியார்-தம்மை தொழுது வந்து அணையாது
ஒருவாறு ஒதுங்கும் வன் தொண்டன் புறகு என்று உரைப்ப சிவன் அருளால்
பெருகா நின்ற பெரும் பேறு பெற்றார் மற்றும் பெற நின்றார்

சேண் ஆர் மேரு சிலை வளைத்த சிவனார் அடியார் திரு கூட்டம்
பேணாது ஏகும் ஊரனுக்கும் பிரான் ஆம் தன்மை பிறை சூடி
பூண் ஆர் அரவம் புனைந்தார்க்கும் புறகு என்று உரைக்க மற்றவர்-பால்
கோணா அருளை பெற்றார் மற்று இனியார் பெருமை கூறுவார்

பின்னர் சிவபெருமான் சுந்தரருக்கு அறிவுறுத்தினார்.  
சுந்தரர் விறல்மிண்டரை வழிபட்டார். 

"தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்" என்று இறைவன் அடியெடுத்துக் கொடுக்க, சுந்தரர் திருத்தொண்டத்தொகை பாடினார்.    

No comments:

Post a Comment