தமிழில் உள்ள ட ண ர ல ள ழ ற ன என்னும் 8 எழுத்துகளும் மொழிமுதல் எழுத்துகளாக வருவதில்லை.
ஏன்?
இதில் உள்ள ஒவ்வொரு எழுத்தையும் தனித்தனியே ஒலித்து வாயில் நிகழ்வதைக் கவனியுங்கள்.
இவற்றை ஒலிக்கும்போது நாக்கு அண்ணத்தின் மேற்பகுதியைத் தொடவேண்டும். இது கடுமையான செயல்.
மொழியில் இந்தக் கடினத் தன்மையைத் தமிழன் விரும்பவில்லை.
எனினும் தன்னை அடையாளப்படுத்த இவற்றைப் பயன்படுத்தினான்.
இந்த 8 எழுத்துகளில் கடைசி 3 ழ ற ன எழுத்துகள் தமிழின் சிறப்பு எழுத்துகள்.
இவற்றுடன் ஒலிக்கும் சொற்கள் தமிழுக்கே உரியவை.
இவற்றைப் பயன்படுத்தி ஒலித்துத் தமிழன் தன்னைத் தமிழன் என்று காட்டிக்கொண்டான்.
பரிதிமால் கலைஞன், மொழி வரலாறு - 5 தோற்றமும் தொன்மையும்
No comments:
Post a Comment