இந்தப் பகுதி
அடியார்க்கு நல்லாரின்
வடமொழிப் புலமைக்கு
ஓர் எடுத்துக்காட்டு
மாதவி 5 வயதிலிருந்து 12 வயது வரை 7 ஆண்டுகள் கூத்தாடக் கற்றுக்கொண்டாள்.
அக்காலத்தில் ஆடப்பட்ட கூத்துகள் 2 வகை
- வசைக்கூத்து - புகழ்க்கூத்து
- வேத்தியல் - பொதுவியல்
- வரிக்கூத்து - வரிச்சாந்திக்கூத்து
- சாந்திக்கூத்து - விநோதக்கூத்து
- ஆரியக்கூத்து - தமிழ்க்கூத்து
- இயல்புக்கூத்து - தேசிக்கூத்து
எனப் பல வகை
இவற்றில் சாந்திக் கூத்து, விநோதக்கூத்து என்னும் இரண்டையும் மாதவி கற்றிருந்தாள்.
1
சாந்திக் கூத்து - தலைவன் இன்பம் ஏந்தி ஆடிய 4 நடம்
2
சொக்கம் / சுத்தநிருத்தம் / 108 கரணம் கொண்டது
3
மெய்
- தேசி
- வடுகு
- சிங்களம்
என்று 3 வகை
மெய்யில் தொழில் உணருமாறு ஆடப்படுவது அகக்கூத்து (அக மார்க்கம்)
அகச்சுவையாவன
- இராசதம்
- தாமதம்
- சாத்விகம்
என 3 வகை
- "குணத்தின் வழியதாகக் கூத்து எனப்படுமே" - குணநூல்
- "அகத்து எழு சுவையால் அகம் எனப்படுமே" - சயந்தம்
4
அவிநயக் கூத்து - கதை தழுவாது பாட்டினது பொருளுக்குக் கையால் வல்லபம் செய்து ஆடுவது
5
நாடகம் (நாடகக் கூத்து) இது கதை தழுவி ஆடப்படுவது
6
விநோதக் கூத்து என்பது குரவை - இது வரிக்கூத்தின் ஓர் உறுப்பு
- கலிநடம் - கழைக்கூத்து
- குடக்கூத்து - மாதவி ஆடிக் காட்டிய 11 ஆடல்
- கரணம் - படிந்தவாறு ஆடல்
- நோக்கு - பாரம், நுண்மை, மாயம் காட்டி ஆடுதல்
- தோற்பாவை - தோலால் பாவை செய்து ஆட்டிக் காட்டுதல்
என 6 வகை
- வெறியாட்டு - தெய்வம் ஏறி ஆடும் கூத்து
இதனையும் சேர்த்து 7 வகை என்பர்..
மேலும்
- வென்றிக்கூத்து - மாற்றான் ஒடுக்கமும் மன்னன் உயர்ச்சியும் தோன்ற ஆடுவது
- வசைக்கூத்து - பழித்துக்காட்டி ஆடும் ஆட்டம் -- வசைக்கூத்து வேத்தியல் பொதுவியல் என 2 வகை.
- இந்தக் கூத்துகள் தாள இசைக்கேற்ப ஆடப்படும்
- விநோதக் கூத்து இவற்றிலிருந்து வேறுபாடு உடையது. வேந்தன், மன்னன் வென்ற போர்க்களத்தில் ஆடப்படுவது.
விலக்குறுப்பு (விலக்கும் உறுப்புகள்)
- பொருள்
- யோனி
- விருத்தி
- சாந்தி
- சுவை
- சாதி
- குறிப்பு
- சத்துவம்
- அவிநயம்
- சொல்
- சொல்வகை
- வண்ணம்
- வரி
- சேதம்
என 14 வகை
6 வகை நிலை
- வைணவம்
- சமநிலை
- வைசாகம்
- மண்டலம்
- ஆலீடம்
- பிரத்தியாலீடம்
5 வகைப் பாதம்
- சமநிலை
- உற்கடிதம்
- சஞ்சாரம்
- காஞ்சிதம்
- குஞ்சிதம்
அங்கக் கிரியை 16
- சரிகை
- புரிகை
- சமகலி
- திரிகை
- ஊர்த்துவ கலிகை
- பிருட்டகம்
- அர்த்த பிருட்டகம்
- சுவத்துவம்
- உல்லோலம்
- குர்த்தனம்
- வேட்டனம்
- உப வேட்டனம்
- தான பத பிராய விருத்தம்
- உஷேபணம்
- அவஷேபணம்
- நிகுஞ்சனம்
வருத்தனை 4
- அபவேட்டிதம்
- உபவேட்டிதம்
- வியாவர்த்திதம்
- பராவர்த்திதம்
நிருத்தக்கை 30
- சதுரச்சிரம்
- உத்துவீதம்
- தலமுகம்
- சுவத்திகம்
- விப்பிதகீர்ணம்
- அருத்தரேசிதம்
- அராளகடகாமுகம்
- ஆவித்துவத்திரம்
- சுசீமுகம்
- இரேசிதம்
- உத்தானவஞ்சிதம்
- பல்லவம்
- நிதம்பம்
- கசதந்தம்
- இலதை
- சுரிகை
- பக்கவஞ்சிதம்
- பக்கப் பிரதியோகம்
- கருட பக்கம்
- தண்ட பக்கம்
- ஊர்த்துவ மண்டலி
- பக்க மண்டலி
- உரோ மண்டலி
- உரப்பார் சுவார்த்த மண்டலி
- முட்டிகச் சுவர்த்திகம்
- நளினீபதும கோசம்
- அலபதுமம்
- உற்பணம்
- இலளிதை
- வலிதை
இவை சுத்தானந்தப் பிரகாசம் என்னும் தமிழ்ப் பரதவியலில் காணப்பட்டவை
சிலப்பதிகாரம் - அடியார்க்கு நல்லார் உரை - பக்கம் 79 மு
No comments:
Post a Comment