திருமாவளவன் (கரிகாலன்) தன் வெற்றிப்படை வடதிசை நோக்கிச் செல்வதை இமயமலை தடுத்தது என்று அதனைச் செண்டால் அடித்தான். அதில் தன் புலிச் சின்னத்தைப் பொறித்து மீண்டான் - என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. (கொடுவரி - புலி)
திருமாவளவன்,வாளும்,குடையும், மயிர்க் கண் முரசும்,நாளொடு பெயர்த்து, ‘நண்ணார்ப் பெறுக-இம்மண்ணக மருங்கின், என் வலி கெழு தோள்’என,புண்ணிய திசைமுகம் போகிய அந் நாள்‘அசைவு இல் ஊக்கத்து நசை பிறக்கு ஒழிய,பகை விலக்கியது இப் பயம் கெழு மலை’ என,இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலை,கொடுவரி ஒற்றி, கொள்கையின் பெயர்வோற்கு(சிலப்பதிகாரம்)
இப்பகுதிக்கு உரை எழுதும் அடியார்க்கு நல்லார் இது தொடர்புள்ள 2 மேற்கோள் பாடல்களைக் குறிப்பிடுகிறார்.
1
கரிகாலன் இமைய உச்சியைச் செண்டால் (கதை-ஆயுதம்) அடித்தான். அது தன் பழைய நிலை மாறாமல் நிற்க அதன்மீது தன் புலிச் சின்னத்தைப் பொறித்தான்.
செண்டு கொண்டு கரிகாலன் ஒருகால் இமையச் சிமைய மால் வரை திரித்து அருளி மீள அதனைப்பண்டு நின்றபடி நிற்க இது என்று முதுகில் பாய் புலி பொறித்து மறித்த பொழுதே
2
கம்பக் களிற்றில் செல்பவன் கரிகால் பெருவளத்தான். அவன் காஞ்சிபுரத்துக் காமக்கோட்டத்தைப் போற்றி வணங்குபவன். அவன் தன் கையில் இருக்கும் செண்டால் பொன்மலையை (இமயமலையை) அடித்து வளையச் செய்தான்.
கச்சி வளைக் கைச்சி காமக் கோட்டம் காவல்மெச்சி இனிதிருக்கும் மெய்ச் சாத்தன் - கைச் செண்டுகம்பக் களிற்றுக் கரிகால் பெருவளத்தான்செம்பொன் கிரி திரித்த செண்டு.
3
கலிங்கத்துப்பரணி
ஒரு சமயம் கரிகாற்சோழன் போர் வேட்கையால் வட திசைக்கண் படையெடுத்துச் சென்றான். அப்போது வடக்கில் உள்ள உச்சிகளை உடைய இமயமலை குறுக்கே நின்று தடுத்தது. அதனைக் கரிகாலன் தன் போர்க்கருவி ஆகிய செண்டினால் தலைகீழாக திருப்பினான். "இம்மலை முன் நின்ற நிலையிலேயே நிற்கட்டும்" என்று எண்ணினான். புலிக்கொடியாாகிய அடையாளச் சின்னத்தை அம்மலையின் நடுவிடத்தில் பொறித்து, இமயமலையை முன் இருந்த நிலையிலேயே திரும்பவும் இருக்கச் செய்தான். (கலிங்கத்துப் பரணி) இதனைக் குறிப்பிடும் பாடல் பகுதி.
செண்டு கொண்டு கரிகாலன் ஒருகாலின் இமயச்சிமய மால் வரை திரித்து அருளி மீள அதனைப்பண்டு நின்றபடி நிற்க இது வென்று முதுகில்பாய் புலிக் குறி பொறித்தது மறித்த பொழுதே(கலிங்கத்துப்பரணி - கண்ணி - 178)
No comments:
Post a Comment