Pages

Friday, 28 November 2025

உலா நூலில் பருவப் பெண்டிர்

தேர் அல்லது யானை மேல் ஏறி, 
தெருவில் உலா வரும் 
தலைமகன் ஒருவனைக் கண்டு 
7 வகையான பருவமகளிர் 
காமம் கொள்வதாகப் பாடும் பாடல் 
உலா இலக்கியம்.

உ வே சாமிநாதையர் திருக்கழுக்குன்றத்துலா முகவுரையில் குறிப்பிட்டுள்ளதாக பருவப் பெண்கள் பற்றிய விளக்கம் ஒன்றை அருணாசலம் குறிப்பிடுகிறார். 

  1. பேதை - உலகியலை அறியாத இளம்பருவம். (5-7)
  2. பெதும்பை - உலகியலை ஒருவாறு உணர்ந்தும் உணராமலும் இருக்கும் பருவம் (11 வயது வரை) 
  3. மங்கை - காம நுகர்ச்சிக்கு  ஏற்புடைய பருவம். (13 வயது வரை)
  4. மடந்தை - காம நுகர்ச்சியில் பயின்ற பருவம். (19 வயது வரை)
  5. அரிவை - காம நுகர்ச்சியில் முதிர்ந்த பருவம். (25 வயது வரை)
  6. தெரிவை - மகப்பேறு பெற்றிருக்கும் நிலையில் இருக்கும் பருவம். (31 வயது வரை)
  7. பேரிளம்பெண் - காம துகர்ச்சி தளரும் நிலையில் உள்ள பருவம். (40 வயது வரை)
இந்தப் பருவப் பெண்களின் அகவை பற்றிய குறிப்பு

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 2, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 240

No comments:

Post a Comment