உலா நூல்களில் காலத்தால் முந்தியது 8-ஆம் நூற்றாண்டு சேரமான் பெருமாள் நாயனார் இயற்றியது திருக்கயிலாய ஞான உலா.
66 உலா நூல்களின் பெயர்கள் இணையம் ஒன்றில் தொகுத்துக் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று இந்த உலா நூல்.
தில்லை உலா 12-ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல்.
தில்லை நடராசப் பெருமான் தெருவில் உலா வருவதைப் பாடும் பாடல் இது.
இந்த நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை.
244 கண்ணிகள் மட்டுமே கிடைக்கின்றன.
இவை தொடக்கம் முதல் அரிவைப் பருவம் 9 கண்ணிகள் வரை உள்ளன.
தஞ்சை சரசுவதிமகால் சுவடி நிலையத்தில் கிடைத்த ஏட்டிலிருந்து எழுதி உலகநாத பிள்ளை என்பவர் தமிழ்ப்பொழில் பருவ இதழில் வெளியிட்டார்.
இந்த நூலில் சொல்லப்படும் பொருளின் நிகழ்வோட்டத்தையும், பாடல் பகுதிகள் சிலவற்றையும் அடுத்து வரும் பதிவில் நாம் காணலாம்.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 2, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 239
No comments:
Post a Comment