Pages

Friday, 28 November 2025

தில்லையுலா - உலா நிகழ்வோட்டம்

சிவகாம சுந்தரி தாளம் போடுகிறாள்
சிவன் தாண்டவம் ஆடுகிறார்
இரு முனிவரும் மாயனும் பிரமனும் கண்டு மகிழ்கின்றனர் 
பல்லுயிரும் காண நடித்து அருள் - என வேண்ட அவன் ஆடுகிறான். 
 
- தில்லை வனத்து
ஆனந்த நூபுரம் நின்று ஆர்க்கும் ஒலி கேட்டு 
வானின் இமையோர்கள் வந்து இறைஞ்சி - நான்மறையில்
ஆய்ந்த பொருளான அஞ்செழுத்தைச் செங்கனகப்
பூந்தகடு தோறும் புறத்து எழுதி - வேய்ந்து
திசை விளங்கு நாமத் திரு அம்பலத்தே
இசை விளங்க நின்று ஆடும் ஈசன் 

அரசன் ஒருவன் பன்றி ஒன்றைத் துரத்திக்கொண்டு வந்தான். 
தில்லைக்கு வந்ததும் பன்றியும் அவன் ஏறிவந்த குதிரையும் பொன்நிறம் பெற்றன.
அதனால் அந்த ஊரில் மறையவர் 3000 பேரைக் குடியேற்றினான்.
அவர்களில் ஒரு மறையவர் காணாமல் போய்விட்டார்.
அதனால் சிவன் தன்னையே ஒரு மறையவனாகக் காட்டிக்கொண்டான். 

ஒருநாள் அந்தச் சிவன் தேரில் வந்தார்.
திருமால், சண்டேசுரர் இருவரும் பல்லக்கில் வந்தனர். 
மாலோன், குபேரன், வேலன், வேதா, ஐங்கரன், மாரன் முதலானோர் அவரவர் ஊர்தியில் ஏறிக்கொண்டு வந்தனர். 

நால்வர், 33 கோடி தேவர், விறல்மிண்டர் முதலான 48000 திருநீற்றுத் தொண்டர், சேரமான் வரகுணன் ஆகியோரும் உடன் வந்தனர். 

திருநீற்றுச் சோழன் படிமமும் குதிரைமேல் வந்தது.   

கண்ட மகளிர் சிவனைக் காமுற்று அரற்றுகின்றனர். 
   
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 2, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 242

No comments:

Post a Comment