கடலால் கொள்ளப்பட்ட புகார் நகரத்தில் இந்திரவிழா நடைபெற்றதைச் சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்கள் கூறுகின்றன.
வான்கண் விழியா வைகறை யாமத்து,மீன் திகழ் விசும்பின் வெண் மதி நீங்க,கார் இருள் நின்ற கடைநாள் கங்குல் (சிலப்பதிகாரம்)
இதற்கு உரை எழுதும் அடியார்க்கு நல்லார்
கீழ்க்காணும் விக்கக் குறிப்பினைத் தருகிறார்.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 2, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 61
வான்கண் - ஆதித்தன்
விழித்தல் - விளங்குதல்
வெண்மதி நீங்க - வெண்மதி நீங்கின அளவிலே
கோவலன் கண்ணகி இருவரும் புகார் நகரை விட்டு வெளியேறினர்.
அன்று இந்திரவிழா நடந்து முடிந்த கடைசி நாள்.
விடியற்கால வேளை.
இந்தப் பகுதிக்கு உரை எழுதும் அடியார்க்கு நல்லார் அந்த நாள் இன்ன நாள் எனக் கணக்கிட்டுக் காட்டியுள்ளார். மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 2, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 61
அன்று சித்திரைத் திங்கள் புகுதிநாள் - சோதி.
திதி - மூன்றாம் பக்கம்.
வாரம் - ஞாயிறு
இத் திங்கள் 28-ல்
சித்திரையும் பூரணையும் கூடிய சனி வாரத்தில் கொடியேற்றி
28 நாளிலும் (மணிமேகலை)
விழா நடந்தது.
கொடி இறக்கி
வைகாசி 28-ல்
பூருவ பக்கத்தில்
13-ஆம் நாள்
சோம வாரம் (திங்கள் கிழமை)
அனுட்ட நாள்
கடலாடி
[கோவலனும் மாதவியும்] ஊடினர்
வைகாசி 29 செவ்வாய்க் கிழமை
கேட்டை நட்சத்திரம்
நாச யோகம்
நிறைமதி
14-ஆம் நாள்
வைகறைப் பொழுதில்
நிலவு பட்ட இருள் நாளில்
[கோவலனும் கண்ணகியும்]
மதுரை செல்லப் புறப்பட்டனர்.
No comments:
Post a Comment