அடியார்க்கு நல்லார் முன்னோர் நூல்களுக்கு உரை எழுதுகையில் மேற்கோளாகப் பல பாடல்களயும் நூல்களையும் குறிப்பிடுகின்றார்.
அவற்றை மிகுதி நோக்கி வரிசைப்படுத்தினால்
1
பெருங்கதை.
- இதனைக் கதை என்றும், உதயணன் கதை என்றும் குறிக்கிடுகிறார். இதிலிருந்து இவர் தரும் எடுத்துக்காட்டுகளில் பல இறந்துபோன பெருங்கதையில் இருந்தனபோலும்.
- இடைச்சங்கத்தார் பாடிய கலி, குருகு, வெண்டாளி நூல்களை ஆராய்ந்து பாடிய நூல் பெருங்கதை என்கிறார்.
- பெருங்கதை 8-ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல்.
- இதனால் இடைச்சங்க நூல்கள் என இவர் குறிப்பிடுபவை 8-ஆம் நூற்றாண்டு வரையில் வழக்கில் இருந்தன எல்லாம்.
2
சிந்தாமணி
இறந்துபோன நூல்களில் 5
ஆசிரியமாலை,பெரும்பொருள் விளக்கம்,செயிற்றியம்,கூத்தநூல்,வளையாபதி
இப்போதுள்ள நூல்களில்
கலிங்கத்துப்பரணி,கலித்தொகை,புறப்பொருள் வெண்பாமாலை,மணிமேகலை.சூளாமணி,இராமாயண உத்தர காண்டம்,திருக்குறள்,திருக்கோவையார்,திவாகரம்,பிங்கலம்,புறநானூறு ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
கனாநூல் பாட்டுகள் பலவற்றை இவர் தருகிறார்.
இந்த நூல் இன்று இல்லை.
பாசுரத் தொடர்கள்
"எங்கள் கண் முகப்பே" - (கருவூர்த்தேவர் & திருமங்கையாழ்வார்)
"வடவர் உட்கும்" - (பதிற்றுப்பத்து - ஐந்தாம் பத்து)
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 2, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 43
No comments:
Post a Comment