சிலப்பதிகாரம் 30 தலைப்புகளில் உள்ளது. பெரும்பாலான தலைப்புகள் ‘காதை’ என முடிவதால் அந்தத் தலைப்புகளை ‘காதை’ என்று நாம் குறிப்பிடுகிறோம்.
கதை பொதிந்த பாட்டைக் காதை எனல் பொதுநோக்கு.
கானல் வரிவேட்டுவ வரிஊர் சூழ்வரிஆய்ச்சியர் குரவைகுன்றக் குரவைதுன்ப மாலைவஞ்சின மாலை
என்பவை காதை என்று கூறப்படவில்லை.
ஆசிரியப்பாசெந்துறைத் தூக்குகலிப்பபாகலிவெண்பா
ஆகிய யாப்பு வகைப் பாடல்கள் அவற்றில் உள்ளன.
ஒவ்வொரு காதையின் முடிவிலும் இது இன்ன யாப்பால் அமைந்த பாடல் என்று அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார்.
இது எல்லா அடியும் தம்முள் ஒத்து முடிதலின் (4 சீர் கொண்ட நேரடியாய் வருதலின் நிலைமண்டில ஆசிரியப்பா - என்பது போன்ற விளக்கங்களை இவர் தருகிறார்.
பதிகம் - குட்டச் செந்தூக்கு
யாப்பு வகை
- கலிவெண்பா - 1
- மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா - 2
- அயல் மயங்கிசைக் கொச்சக்கலிப்பா - 1
- நிலைமண்டில ஆசிரியப்பா - 12
- ஆய்ச்சியர் குரவை - இது கூத்தால் பெற்ற பெயர்
- கனாத்திறம் உரைத்த காதை - இது 12 அடியின் மிக்கு வருதலின் நெடுவெண்பாட்டு ஆகாது; கலிவெண்பா ஆயிற்று.
போன்றவை இவர் தரும் யாப்பு வகை பற்றிய செய்திகள்.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 2, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 45
No comments:
Post a Comment