சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார் உரையில் மதுரையில் நடைபெற்ற காமன் விழா பற்றிய குறிப்புகள் உள்ளன.
இந்த விழாவைப் "பங்குனி முயக்கம்" (பங்குனித் திருவிழா) என்றும், ‘வில்விழா’ என்றும் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
இந்த விழா வடநாட்டில் ‘ஹோலிப்பண்டிகை’ என்று கொண்டாடப்படுகிறது. கொங்கு நாட்டில் ‘உள்ளி விழா’ என்னும் பெயரில் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவைக் காண அயல்நாட்டு வணிகர்களும் மதுரை வந்தனர். சேரநாட்டுச் செல்வ வளங்களை அவர்கள் மதுரைக்குக் கொண்டுவந்தனர். மேலைக்கடல் தொண்டித் துறைமுகத்திலிருந்து கீழைக்கடல் தொண்டித் துறைமுகத்துக்கு வங்கக் கப்பலில் ஏற்றிக் கொண்டுவந்தனர். இங்கிருந்து மதுரைக்குக் கொண்டுவந்தனர்.
ஆங்கு அது அன்றியும், ‘ஓங்கு இரும் பரப்பின்
வங்க ஈட்டத்துத் தொண்டியோர் இட்ட
அகிலும், துகிலும், ஆரமும், வாசமும்,
தொகு கருப்பூரமும், சுமந்துடன் வந்த
கொண்டலொடு புகுந்து, கோமகன் கூடல்
வெங் கண் நெடு வேள் வில்விழாக் காணும்
பங்குனி முயக்கத்துப் பனி அரசு யாண்டு உளன்?
(சிலப்பதிகாரம், ஊர்காண் காதை)
ஐவகைப் பெருக்கம்
இவர்கள் கொண்டுவந்த செல்வம் ‘ஐவகைப் பெருக்கம்’ என்று குறிப்பிடப்பபட்டு அடியார்க்கு நல்லார் உரையில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
துகில்
- கோசிகம், பீதகம் எனத் தொடங்கி 37 வகை
- மேலும் பல்வகைத் தொகுதி
ஆரம்
- மலையாளம் முதலான 6 வகை
- மேலும் பல்வகைத் தொகுதி
வாசம்
- அம்பர் முதலான 15 வகை
- மேலும் பல்வகைத் தொகுதி
கருப்பூரம்
- மலைச்சரக்கு முதலான 14 வகை
- மேலும் பல்வகைத் தொகுதி
மேலும்
மணி
- 9 வகை, அதன் குணம், குற்றம் ஆகியவற்றைக் கூறும் நூற்பாக்கள்
அணிகலன்கள்
- மாதவி தன்னை அழகுபடுத்திக்கொண்ட அணிகலன்கனின் பெயர்கள்
ஆகியவற்றை விரித்துரைக்கிறார்.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 2, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 46
No comments:
Post a Comment