Pages

Tuesday, 18 November 2025

பழமொழி, வழக்கு (அடியார்க்கு நல்லார்)

அடியார்க்கு நல்லார் உரை காட்டும் சில பழமொழிகளும், மொழி-வழக்குகளும், பழக்கவழக்கங்களும் எண்ணத் தக்கவை. 

பழமொழி


  • விளையாட்டுப் பூசல் வினையாயிற்று
  • திருவாணைக்கு மேலாய ஆணை இல்லை
  • கெட்டால் மதி தோன்றும் 

மொழி வழக்கு


  • தெழித்தல் - பிரித்தலும் ஆம். இது குடநாட்டார் வழக்கு
  • பனி என்பதோர் நோய் உண்டு. இது குடநாட்டார் வழக்கு
  • பணித்தல் - அருளிச் செய்தல். இது திசைசொல். (என்னைப் பணித்தான்). இது பணிவிடை எனவும் வழங்கப்படும். 
  • சொன்னோம் சொன்னனோம் 
  • நீயிரே இதனைச் செய்வீராயின் (எனக்குக் கவலை இல்லை)

மக்கள் வழக்கம் 


தண்டனை
  • பதியிலார் என்போர் கணவன் இல்லாத பெண். பதியிலார் இல்லம் புகுந்து குற்றம் செய்தவருக்கு என்ன தண்டனை வழங்கினர்? 7 செங்கலை அவன் தலையில் சுமத்தி ஊரைச் சுற்றிவரச் செய்து, ஊரை விட்டு அவனை ஒதுக்கி வைப்பபர். 

முத்து நோக்குவார் 
முத்தின் தரம் காண்போர்
  • நீலநிறத் துணியால் பந்தல் போட்டு முத்தில் ஒளி விழுதலைக் கொண்டு முத்தின் தரத்தை மதிப்பர். 

நறுமடி
  • துணிக்கடையில் மணக்கும் பொருள்களைத் தூவி வைப்பர். அதனால் துணியில் மணம் வீசும். இந்தத் துணியை ‘நறுமடி’ என்றனர். 

விரதம்
நோன்பு
  • 2 உவாநாள் (அம்மாவாசை, பௌர்ணமி), அட்டமி நாள்களில் பட்டினி கிடந்து உண்ணும் பழக்கம். இதனைப் பெரும்பாடு என்றும் வழங்குவர். 

நங்கை
  • மருமகளை நங்கை என்னும் சொல்லால் குறிப்பிட்டு வழங்கினர் 

இடுவந்தி
  • குற்றம் இல்லாதவன் மேல் குற்றம் சுமத்துதல்.

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 2, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 42

No comments:

Post a Comment