Pages

Monday, 17 November 2025

சொல்லும் பொருளும் (அடியார்க்கு நல்லார்)

அடியார்க்கு நல்லார் உரையில் எண்ணற்ற சொற்களும், தொடர்களும் சுவையான பொருளை உணர்த்துகின்றன. அவற்றுள் சில:

அத்திரி
  • கோவலன் இராச வாகனமாகிய அத்திரி ஏற
  • அத்திரி - கோவேறு கழுதை

இடம் பிடித்தல்
  • பெருநீர் இடம் பிடிக்க விரைந்து செல்லும் மக்களோடு 
  • (பேருந்தில் இடம் பிடிக்க - இக்காலம்)

உண்டல் = உறுதல் (துணைவினை)
  • கட்டுண்டான் - கட்டப்பட்டான் - கட்டுற்றான் 

கடன்
  • தன்னைத் தான் இடும் பலிக் கடன்
"அக்கழுத்தினுடன் சிரத்தை அரிவர் ஆலோ
அரிந்த சிரம் அணங்கின் கைக் கொடுப்பர் ஆலோ
கொடுத்த சிரம் கொற்றவையைத் துதிக்கும் ஆலோ
குறை உடலம் கும்பிட்டு நிற்கும் ஆலோ (கலிங்கத்துப் பரணி)

சாத்தன் 
  • மகாசாஸ்தா
  • ஐயனார் 
  • சாத்திரங்களைப் பயின்ற மகாசாத்திரன்

புனிதன் (அருகன் பெயர்)
  • புதியவன்

புராணன் (அருகன் பெயர்)
  • பழையவன்

பண்ணை
  • ஓடைகள் பாயும் வயல் 

பொறை
  • மண் மேடிட்டிருக்கும் சிறு மலை

திசைமுகம் பசந்து
  • திசையாகிய முகமானது மாலை வேலையில் பொன்-நிறம் பெற்று
  • காடுகிழாள் வெயில்
  • பசலை - பீர்க்கம்பூ நிறம் - பொன் நிறம்

முகவைப் பாட்டு
  • முகந்து அளக்கும்போது எண்ணலைப் பண்ணிசையுடன் பாடும் பாட்டு
  • கயிறு குறு முகவை
  • ஏற்றம் இறைக்கும்போது பாடும் ஏற்றப்பாட்டு 

வச்சிரம் 
  • இருதலைச் சூலம் 
  • நடுவில் பிடித்து எந்தப் பக்கத்திலும் வீசக்கூடிய படைக்கருவி

"காதல் கொழுநனைப் பிரிந்து அலர் எய்தா
மாதர்க் கொடுங்குழை மாதவி தன்னொடு"
  • புகாரில் இந்திர விழா
  • வேனில் காலம் 
  • மாதவி, முல்லை, மல்லிகை, மயிலை, தாழியில் வளர்த்த குவளை, செங்கழுநீர் மலர்களால் கட்டப்பட்ட மாலை அணிவிக்கப்பட்ட யாழை மாதவி கோவலன் கையில் தருகிறாள். 
  • இவற்றில் மாதவிப் பூ மட்டும் மேலே கண்டவாறு விளக்கிக் கூறப்பட்டுள்ளது. 
  • இதற்கு அடியார்க்கு நல்லார் உரை எழுதும்போது 
  • மாதவி பூவுக்குத் தரப்பட்டுள்ள அடைமொழித்தொடர் மாதவிக்கும் கண்ணகிக்கும் பொருந்தும் என்று காட்டி உரை எழுதுகிறார். 
  • காதலனைப் பிரிந்திருக்கும்போதும் அலர் தூற்றப்பபடாதவள் மாதவி, கண்ணகி ஆகிய இருவரும் என்று குறிப்பிட்டுக் காட்டுகிறார். 

ஆறிய கற்பு, சீறிய கற்பு
  • இந்தத் தொடர் இன்று மேடைகளில் முழங்கப்படுகிறது
  • இந்தத் தொடரை அன்றே குறிப்பிட்டவர் அடியார்க்கு நல்லார். 
  • மாதவி ஆறிப்போன கற்புடையவளாகத் திகழ்ந்தாள்
  • கண்ணகி சீற்றம் கொண்ட கற்புடையவளாக மாறினாள்

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 2, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 40

No comments:

Post a Comment