Pages

Sunday, 16 November 2025

இசை, நாடக நூல்கள்

அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரம் நூலுக்கு உரை எழுதினார். அதில் இசைத் தமிழ், நாடகத் தமிழ் பற்றிய செய்திகள் பலவற்றைத் தந்துள்ளார். அவை எங்கிருந்து திரட்டப்பட்டன என்பதையும் குறிப்பிடுகிறார். அந்த 5 இலக்கண நூல்கள் பற்றிய குறிப்புகள் இங்குத் தரப்படுகின்றன. 

இசைத்தமிழ் நூல்கள்

இசைநுணுக்கம்
  • இது வெண்பா யாப்பால் ஆனது
  • இதனை இயற்றிய ஆசிரியர் சிகண்டி 
  • சாரகுமரன் இசை பற்றித் தெரிந்துகொள்ள இதனை எழுதினார். 
  • சிகண்டி குறுமுனிவர் அகத்தியனின் மாணாக்கர். 

இந்திர காளியம்
  • இது நூற்பா (சூத்திரம்) யாப்பில் அமைந்த நூல் 
  • இதனை இயற்றியவர் யமளேந்திரர் 
  • இவர் பராசர முனிவர். 
  • இது பாட்டியல் இலக்கணம் பற்றிக் கூறும் நூல் 

நாடகத்தமிழ் நூல்கள்

பஞ்சமரபு
  • இது வெண்பா யாப்பில் அமைந்த நூல் 
  • இதனை இயற்றியவர் அறிவனார் 
  • இந்த நூலின் ஒரு பகுதி வே ரா தெய்வசிகாமணிக் கவுண்டர் மூலம் தனக்குக் கிடைத்ததாக மு. அருணாசலம் குறிப்பிடுகிறார். 

பரத சேனாபதீயம் 
  • இது வெண்பா யாப்பால் அமைந்த இலக்கண நூல் 
  • இதனை இயற்றியவர் ஆதிவாயிலார். 

மதிவாணனார் நாடகத்தமிழ் நூல் 
  • இது நூற்பா யாப்பால் ஆனது
  • இதனை இயற்றியவர் பாண்டியன் மதிவாணனார்
  • வசைக்கூத்துக்கு மறுதலையாக இசைக்கூத்து (புகழ்க்கூத்து) அமைந்திருக்கும் செய்தியை இது குறிப்பிடுகிறது. 

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 2, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 22 அட்டவணை    

No comments:

Post a Comment