பேரியாழ் அளவில் பெரியதாக இருந்தது.
அதனால் இதனைப் ‘பெருங்கலம்’ என்றனர்.
கலம் என்பது யாழ்.
இதன்
கோடு 12 சாண்
வணர் ஒரு சாண்
பத்தர் 12 சாண்
நரம்பு 1000
இதனைக் குறிக்கும் பாடல்
ஆயிரம் நரம்பிற்று ஆதியாழ் ஆகும்ஏனை உறுப்பும் ஒப்பன கொளலேபத்தர் அளவும் கோட்டினது அளவும்ஒத்த என்ப, இருமூன்னறு இரட்டிவணர் சாண் ஒழித்து என வைத்தனர் புலவர்.
இது அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் உரைமேற்கோள் பாடல்
ஒருவன் யாழ் மீட்டினான். அவன் பேரியாழோடு பிற வகை யாழையும் மீட்ட அறிந்தவன். பாயிரம் பாடிய பின்னர் பிற பண்களை அவன் மீட்டுவான். இவன் யாழிசை கேட்ட தானவர் செருக்கு அழிந்தனர். மகளிர் விரும்பினர். இதனைக் கூறும் பாடல்:
தலமுதல் ஊழில் தானவர் தருக்கு அறபுலமகளார் புரிதரப் பாயிரம்வலிபெறத் தொடுத்த வாக்கு அமைப் பேரியாழ்ச்செலவு முறை எல்லாம் செய்கையில் தெளிந்துமற்றை யாழும் கற்று முறை பிழையான்அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் மற்றொரு மேற்கோள்
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 2, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 18
No comments:
Post a Comment