அட்டாங்க யோகம் என்பதை ‘எண்சாண் உடம்பின் கொடை’ எனத் தமிழில் கூறுதல் பொருத்தமாகும்.
அட்டம் - எட்டு
அங்கம் - உறுப்பு
யோகம் - கொடை (யோகம் அடித்தது)
உடம்பிலுள்ள உறுப்புகளை இறைவன் நமக்கு எதற்குக் கொடுத்திருக்கிறான்?
நாம் அவற்றை எதற்குக் கொடுக்க வேண்டும்?
உடம்பை நிலைகொள்ளச் செய்யும் படிநிலையை ‘யோகம்’ என்கின்றனர். ‘இருக்கை’ யோகம் என்று கூறப்படுகிறது.
- இயமம்
- நியமம்
- ஆதனம்
- பிராணாயாமம்
- பிரத்தியாகாரம்
- தாரணை
- தியானம்
- சமாதி
அடியார்க்குநல்லார் இவற்றை
- இயமம்
- நியமம்
- ஆசனம்
- வளிநிலை
- தொகைநிலை
- பொறைநிலை
- நினைத்தல்
- சமாதி
என்று குறிப்பிட்டுள்ளார்.
இவற்றில்
- வளிநிலை
- தொகைநிலை
- பொறைநிலை
- நினைத்தல்
என்னும் 4 இருப்புகளின் பெயர்கள் தமிழில் கூறப்பட்டுள்ளன.
சமாதி என்னும் சொல் பரிபாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பரிபாடலில் நொசிப்பு என்னும் சொல் வருகிறது. (5-37)
"மனத்தினை ஒன்றாக்கி தண்ணியதாகக் காண்டலின் நொசிப்பு சமாதி எனப்பட்டது" - என்று பரிமேலழகர் இதற்கு உரைக்குறிப்பு தருகிறார்.
இங்கு முனிவர் தவம் செய்யும் சமாதிநிலை நொசிப்பு எனக் கூறப்பட்டுள்ளது.
நொசிப்பு என்பது மனத்தினை தண்ணிய நீர் போலச் சமநிலைப் படுத்தும் தவம் என்னும் யோகநிலை ஆகும்.
இயமம் என்பது நல்லொழுக்கக் கட்டுப்பாடு. இது செய்யக் கூடாத செயலைத் தவிர்த்தல். எமன் செயலைத் தவிர்த்தல். ஒழுக்கம்.
நியமம் என்பது செய்யவேண்டிய நற்செயல். நடத்தை.
ஆதனம் என்பது ஆசனம் என்னும் வடசொல்லின் தமிழாக்கம். இது உடல் கட்டுப்பாடு. தன் உடலைத் தானே நிலைநிறுத்திக் கொள்ளுதல். இதனை உடலுளப் பயிற்சி எனலாம்.
இப்படிப் பார்க்கும்போது, இவற்றை
- இயமம் --- ஒழுக்கம்
- நியமம் --- நடத்தை
- ஆதனம் --- உடலுளப் பயிற்சி
- பிராணாயாமம் --- வளிநிலை என்னும் மூச்சுப் பயிற்சி
- பிரத்தியாகாரம் --- தொகைநிலை
- தாரணை --- பொறைநிலை
- தியானம் --- நினைத்தல்
- சமாதி --- நொசிப்பு
எனத் தமிழில் சொல்லி புரிந்துகொள்ளலாம்.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 2, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 12
No comments:
Post a Comment