திருவள்ளுவர் உலகியலை இரட்டையமாகக் காண்கிறார். இதனைச் சீனமொழி ‘யின் யாங்கு’ என்று குறிப்பிடுகிறது.
இன்மை - இயக்கம்
இருள் - ஒளி
ஆண் - பெண்
நன்மை - தீமை
உயிர் - உடல்
ஆக்கம் - அழிவு
போன்றவை ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க முடியாதவை.
வேண்டுதல் வேண்டாமை என்னும் எண்ணங்களும் அப்படிப்பட்டவை.
இவற்றைத் தத்துவம் (அது இரண்டாக இருக்கிறது) என்பர்.
இறைவனுக்கு இப்படி இரண்டுபட்ட நிலை இல்லை.
நாம் ஒரு காலை நிலத்தில் ஊன்றி மற்றொரு காலை உயர்த்தும்போது இயக்கம் உண்டாகிறது.
இதனை வள்ளுவர் அடி என்கிறார். இயங்கும் நம் அடிகளில் "இருள் சேர் இருவினைகள்" உள்ளன. நமக்குத் தெரிந்த வினைகள் இருளாக உள்ளன. நல்லதா கெட்டதா என்று நமக்குத் தெரியாத ‘இருள்’வினை.
இறைவன் இயக்கம் ஒளி. இருப்பு இருள்.
![]() |
| ஒளி - இருள் |
இறைவனின் இருப்பு இயக்கம் இரண்டுமே
நம் கண்ணுக்கும் தெரியாது.
அறிவுக்கும் புரியாது.

No comments:
Post a Comment