அருகில் உள்ளவரை அழைக்க உண்டாக்கும் ஒலி ‘எல்லா’. இதனை ஒலிக்குறிப்பு Audio notation என்கிறோம்.
அம்மா முதலான சில ஒலிக்குறிப்புகளைத் தொல்காப்பியம் பட்டியலிடுகிறது.
'Hello' என்று தொலைபேசியில் அழைக்கிறோம். இந்த ஒலி இக்காலத்தில் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறதோ அதே பொருளில் ‘எல்லா’ என்னும் ஒலிக்குறிப்புச் சொல்லை ஆதி காலத்தில் தமிழர்கள் பயன்படுத்தினர்.
சங்கப்பாடல்களில் இச்சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதைச் சற்று நோக்கலாம்.
இந்த விளியொலி
எல்லா
எலுவ
என்று இரண்டு வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எல்லா என்னும் சொல் 48 இடங்களிலும்
எலுவ என்னும் சொல் 3 இடங்களிலும்
பயன்படுத்தப்பட்டுள்ளன.
உரிமையும், உயர்வும் தோன்றும் வகையில் எல்லா என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தலைவன், தலைவி, தோழி, தோழன் (பாங்கன்) ஆகியோர் தமக்குள் மற்றவரை விளிக்க இந்தச் சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.
- பெரும் தோள் செல்வத்து இவளினும் எல்லா என் பெரிது அளித்தனை நீயே பொற்பு உடை - நற் 270
- எல்லா எல்லை எல்லவும் தோன்றார் - குறு 285
- தெரி_இழாய் செல்க என்றாய் எல்லா யாம் பெற்றேம் - பரி 8/83
- எல்லா துனியும் இறப்ப தன் காதலன் - பரி 12/73
- நின்னுள் நோய் நீ உரைத்து அலமரல் எல்லா நாம் - கலி 34/21
- துறந்து உள்ளார் அவர் என துனி கொள்ளல் எல்லா நீ - கலி 35/8
- மறந்தான் மறக்க இனி எல்லா நமக்கு - கலி 42/5
- எஞ்சாது எல்லா கொடுமை நுவலாதி - கலி 42/25
- எல்லா இஃது ஒத்தன் என் பெறான் கேட்டை காண் - கலி 61/1
- எல்லா நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய் போல் காட்டினை - கலி 61/7
- புல் இனிது ஆகலின் புல்லினென் எல்லா தமக்கு இனிது என்று வலிதின் பிறர்க்கு இன்னா - கலி 62/6,7
- எல்லா எவன் செய்வாம் - கலி 63/5
- எல்லா நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு - கலி 64/19
- அலைத்த புண் வடு காட்டி அன்பு இன்றி வரின் எல்லா புலப்பென் யான் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின் - கலி 67/7,8
- பாடு அழி சாந்தினன் பண்பு இன்றி வரின் எல்லா ஊடுவென் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின் - கலி 67/11,12
- நனி சிவந்த வடு காட்டி நாண் இன்றி வரின் எல்லா துனிப்பென் யான் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின் - கலி 67/15,16
- இனி எல்லா யாம் தீதிலேம் என்று தெளிப்பவும் கைந்நீவி - கலி 81/33
- கோல் தா நினக்கு அவள் யார் ஆகும் எல்லா வருந்தி யாம் நோய் கூர நுந்தையை என்றும் - கலி 82/25,26
- எம் இல் வருதியோ எல்லா நீ தன் மெய் கண் - கலி 83/27
- நல் வாயில் போத்தந்த பொழுதினான் எல்லா கடவுள் கடி நகர்-தோறும் இவனை - கலி 84/5,6
- ஏஎ தெளிந்தேம் யாம் காயாதி எல்லாம் வல் எல்லா பெரும் காட்டு கொற்றிக்கு பேய் நொடித்து ஆங்கு - கலி 89/7,8
- பண்டைய அல்ல நின் பொய் சூள் நினக்கு எல்லா நின்றாய் நின் புக்கில் பல - கலி 90/24,25
- இல்லத்து வா என மெய் கொளீஇ எல்லா நின் - கலி 94/15
- நில் ஆங்கு நில் ஆங்கு இவர்தரல் எல்லா நீ - கலி 95/1
- அருளுகம் யாம் யாரேம் எல்லா தெருள - கலி 95/29
- எல்லா கெழீஇ தொடி செறித்த தோள் இணை தத்தி - கலி 97/22
- எல்லா இஃது ஒன்று கூறு குறும்பு இவர் - கலி 107/1
- எல்லா தவறும் அறும் - கலி 107/17
- மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் எல்லா வருந்துவேன் அல்லனோ யான் - கலி 107/27,28
- இகலாட்டி நின்னை எவன் பிழைத்தேன் எல்லா யான் - கலி 108/7
- கொண்டது எவன் எல்லா யான் - கலி 108/24
- குடி-தொறும் நல்லாரை வேண்டுதி எல்லா இடு தேள் மருந்தோ நின் வேட்கை தொடுதர - கலி 110/2,3
- சிற்றில் புனைகோ சிறிது என்றான் எல்லா நீ - கலி 111/9
- கோதை புனைகோ நினக்கு என்றான் எல்லா நீ - கலி 111/13
- எல்லா கடாஅய கண்ணால் கலைஇய நோய் செய்யும் - கலி 112/5
- ஒக்கும் அறிவல் யான் எல்லா விடு - கலி 112/15
- யார் எல்லா நின்னை அறிந்ததூஉம் இல் வழி - கலி 113/5
- எல்லா நின்னொடு சொல்லின் ஏதமோ இல்லை-மன் - கலி 113/11,12
- சொல் அறியா பேதை மடவை மற்று எல்லா நினக்கு ஒரூஉம் மற்று என்று அகல் அகலும் நீடு இன்று - கலி 114/8,9
- பாங்கு அரும் கானத்து ஒளித்தேன் அதற்கு எல்லா ஈங்கு எவன் அஞ்சுவது - கலி 115/15,16
- முன்னை நின்று ஆங்கே விலக்கிய எல்லா நீ - கலி 116/3
- எல்லா நீ உற்றது எவனோ மற்று என்றீரேல் என் சிதை - கலி 142/19
- எல்லா நீ என் அணங்கு உற்றனை யார் நின் இது செய்தார் - கலி 144/9
- எல்லா கதிரும் பரப்பி பகலொடு - கலி 145/27
- எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய - புறம் 1/11
- எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை - புறம் 203/3
- எல்லா மனையும் கல்லென்றவ்வே - புறம் 296/3
- ஏஎ எல்லா மொழிவது கண்டை இஃது ஒத்தன் தொய்யில் - கலி 64/8
மேலே குறிப்பிட்ட பெருமக்கள் எள்ளல் குறிப்போடு தம்மவரை அழைக்கும் சொல்லாக [எலுவ] என்னும் சொல்
- நாணிலை எலுவ என்று வந்திசினே - நற் 50/8
- யாரை எலுவ யாரே நீ எமக்கு - நற் 395/1
- எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப - குறு 129/1
No comments:
Post a Comment