சொல்
எழுத்து தனித்து நின்றோ இணைந்து நின்றோ பொருள் தருமாயின் அதனைச் சொல் என்கிறோம்.
புணர்ச்சி
சொல்லோடு சொல் சேர்ந்து நின்று கருத்தை உணர்த்தும் நிலையைப் புணர்ச்சி என்கிறோம்.
இயல்புப்புணர்ச்சி
சொற்கள் தம் இயல்பில் மாறாமல் நின்று கருத்தை உணர்த்துவதை இயல்புப்புணர்ச்சி என்கிறோம்.கண் தெரிகிறது.
விகாரப்புணர்ச்சி
சொற்கள் தம் நிலையில் மாற்றம் பெற்றுப் புணர்வதை விகாரப்புணர்ச்சி என்கிறோம்
விகாரம்
சொல்லில் எழுத்து குறைந்தோ, கூடியோ, மாறியோ இந்த மாற்றம் (விகாரம்) நிகழும்.
மரம் வேர் - மலவேர் (ம் குறைந்தது)புலி கால் - புலிக்கால் (க் கூடிற்று)வேல் கண் - வேற்கண் (ல் ற் என மாறிற்று)
No comments:
Post a Comment