Pages

Sunday, 19 October 2025

மனநலம் mental health

மனம் என்னும் சொல்லைக் கையாண்டு வள்ளுவர் என்னென்ன கருத்துகளைக் கூறுகிறார் என்பது இங்குத் தொகுத்துரைக்கப்படுகிறது.

மனத்தை 
  • நெஞ்சு 
  • உள்ளம்
  • நினைவு
  • உணர்ச்சி
என்னும் சொல்லாலும் குறிப்பிடுகிறோம். 

மனம் கிளைக்குக் கிளை தாவும் குரங்கு போன்றது.
மனம் என்னும் பட்டம் ஆசைக் கயிற்றில் பறக்கும்.
மனம் என்னிம் காற்றாடி ஆசை என்னும் காற்றில் சுழன்றுகொண்டே இருக்கும். 
மனத்தை ஒரே இடத்தில் நிறுத்த முடியாது. 

உணர்ச்சி வயப்படாமல் உணர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். 

மனம் என்பது ஒருவகை நினைவொளி
இது ஒரு பாய்ச்சல் (ஸ்பெக்ட்ரம்). 

வள்ளுவர் சொல்கிறார்:


மனக்கவலை

  • இறைவனிடம் தன்னை ஒப்படைத்துவிட்டால் மனக்கவலை மாறும். 
  • தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது

மனநலம்

  • ஒருவனின் மனம் நலமாக இருந்தால் அது உயிரினங்களுக்கெல்லாம் செல்வம்
  • மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம் எல்லா புகழும் தரும்

  • மனம் நலமாக இருந்தாலும் இனந்தான் ஒருவனுக்குப் பாதுகாப்பைத் தரும்.
  • மன நலம் நன்கு உடையராயினும் சான்றோர்க்கு இன நலம் ஏமாப்பு உடைத்து

  • மனநலம் ஒருவனுக்கு அடுத்த பிறவியில் நலம் தரும்.
  • மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும் இன நலத்தின் ஏமாப்பு உடைத்து 

மனத்திட்பம்

  • மன உறுதியால் செயலில் உறுதி உண்டாகும். 
  • வினை திட்பம் என்பது ஒருவன் மன திட்பம் மற்றைய எல்லாம் பிற 

இருமனப் பெண்டிர்

  • பொருளுக்கு உடலைத் தரும் பெண்ணோடு தொடர்பு கொண்டால் செல்வம் அழியும்.
  • இரு மன பெண்டிரும் கள்ளும் கவறும் திரு நீக்கப்பட்டார் தொடர்பு 

மனத்தது மாசு

  • போலித் துறவிகள் நல்லவர் போல நடிப்பர். 
  • மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி மறைந்து ஒழுகும் மாந்தர் பலர்

வஞ்ச மனத்தான் 

  • வேடதாரியின் ஏமாற்று நடத்தையை அவன் உடம்பிலுள்ள 5 பூதங்களும் பார்த்துச் சிரிக்கும். 
  • வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்

மனவுணர்ச்சி

  • உணர்ச்சி மனத்தில்தான் பிறக்கிறது. 
  • மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம் இன்னான் எனப்படும் சொல் 

மனத்தால்

  • மாண்பில்லாத செயலைச் செய்ய மனத்தாலும் நினைக்கக் கூடாது. 
  • எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம் மாணா செய்யாமை தலை 

மனத்தின் அமையார்

  • மனத்தோடு மாறுபட்டு ஒப்புக்குப் பசப்புவாரை நம்பக்கூடாது. 
  • மனத்தின் அமையாதவரை எனைத்தொன்றும் சொல்லினான் தேறற்பாற்று அன்று 

மனத்து 

  • அறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டிக்கொள்ளும்.  உண்மையில் அறிவு மனத்தில் இல்லை. ஒருவன் அறிவு அவன் சேர்ந்திருக்கும் இனத்தைத்தான் நினைத்துக்கொண்டிருக்கும். 
  • மனத்து உளது போல காட்டி ஒருவற்கு இனத்து உளது ஆகும் அறிவு 

மனத்துக்கண்

  • குற்றமற்ற மனமே அறம்
  • மனத்துக்-கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற

மனத்தொடு 

  • மனத்திலும் சொல்லிலும் நல்லவை இருந்தால், அவன் தவம் செய்யும் துறவியைக் காட்டிலும் தானம் செய்யும் வள்ளலைக் காட்டிலும் மேலானவன். 
  • மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானம் செய்வாரின் தலை 

மனம் 

  • கொலைக்கருவி வைத்திருப்பவன் கொல்வதையே நினைத்துக்கொண்டிருப்பான். 
  • ஊன் சுவை கண்டவன் மனம் புலால் உண்பதையே நினைத்துக்கொண்டிருக்கும்.
  • படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது ஒன்றன் உடல் சுவை உண்டார் மனம்

  • சேர்ந்திருப்பவர் தூய்மையாக இருந்தால்தான் மனம் தூய்மையாக இருக்கும்.
  • மனம் தூய்மை செய் வினை தூய்மை இரண்டும் இனம் தூய்மை தூவா வரும் 

  • மனம் தூய்மை உள்ளவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் தூய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். 
  • மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு இல்லை நன்று ஆகா வினை 

  • இன்ப-மகளிர் மனம் மாறுபாடு உடையது.
  • இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர் மனம் போல வேறுபடும் 

  • மாட்சிமை இல்லாதவர் மனம் திருந்தாது.
  • பல நல்ல கற்ற கடைத்தும் மனம் நல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது

  • மனத்தில் மாட்சிமை இல்லாதபோது உட்பகை தோன்றும். 
  • மனம் மாணா உட்பகை தோன்றின் இனம் மாணா ஏதம் பலவும் தரும்

No comments:

Post a Comment