பட்டோலை என்பது குறிப்போலை. Note slip. பாடல் பாடுவதற்கு என்று குறிப்பு எழுதி வைக்கப்பட்ட ஓலை.
நேமிநாதர் என்பவர் பட்டோலை வைத்திருந்தார்.
அதைப் பார்த்து ஒட்டக்கூத்தர் ஒரு பாடலைப் பாடினார்.
பேராசிரியர் நேமிநாதர் பட்டோலை பிடிக்க ஒட்டக்கூத்தர் பாடியது என்று ஒரு பாடல் கனகசுந்தரம் பிள்ளை (1921) பதிப்பு தமிழ்நாவலர் சரிதை நூலில் காப்படுகிறது.
"ஆடும் கடைமணி" எனத்தொடங்கும் ஒட்டக்கூத்தர் பாடலை அடுத்து இது உள்ளதால் இதனையும் ஒட்டக்கூத்தர் பாடினார் என்றே கொள்ளல் தகும்.
பட்டோலைக் குறிப்பின்படிப் பாடிய பாடல்
செங்கால் மட அன்னம் படர் தீயாம் என வெருவிச்
சிறையில் பெடை மறையக் கொடு திரியத் திரள் கமுகின்
பைங்காய் மரகதம் மீது படர்ந்து ஏறி நறும் தண்
பாளைக்கு இடை பவளக்கொடி படர் காவிரி நாடா
தம் காதலி அரு மைந்தரும் உடனாக வணங்கித்
தலைகா, எமது உடல் கா, எமது உயிர் கா, அகளங்கா
கொங்கா மன துங்கா என மதுரேசர் வணங்கும்
கொல்யானை அபங்கா இவள் குழல் ஓசை பொறாளே
ஆண் அன்னத்தின் கால் சிவந்து இருந்தது. அதனைப் பார்த்த பெண் அன்னம் தீ பற்றிக்கொண்டது என்று எண்ணிப் பாக்கு மரத்தின் மேல் ஏறிற்று. அங்குப் பாளையில் வெடித்திருந்த பாக்குக் காய்களும் சிவந்திருந்தன. அதனால் வெருவிற்று. இப்படிப்பட்டவன் காவிரிநாடன்.
பேராசியர் நேமிநாதர்
இவர் தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய பேராசிரியரும் அல்லர்.நேமிநாதம் என்னும் நூல் செய்த குணவீர பண்டிதரும் அல்லர்.ஒட்டக்கூத்தர் காலத்தவர்.
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 262
No comments:
Post a Comment