Pages

Monday, 20 October 2025

ஒட்டக்கூத்தருக்கும் புகழேந்திப் புலவருக்கும் இடையே பூசல் கதைகள்

ஒட்டக்கூத்தர் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். 
புகழேந்தி 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். 

ஒட்டக்கூத்தரால் பாடப்பட்ட குலோத்துங்கனுக்கு 2 மனைவி. 
ஒருவர் தியாகவல்லி. 
மற்றொருவர் முக்கோக்கிழானடி.
இவர்களில் யாரும் பாண்டியன் மகள் அல்லர்.

இருவருக்கும் புலமைக் காய்ச்சல் இருந்ததாகப் பல கீழ்த்தரமான கதைகள் விநோத மஞ்சரி என்னும் பருவ இதழில் வெளிவந்துள்ளன.

இவை அட்டாவதானம் வீராசாமிச் செட்டியாரின் கற்பனை. 
இவர் 19ஆம் நூற்றாண்டினர். 

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்றாண்டு பாகம் 1, பார்க்கர் அச்சகம் பதிப்பு, 1973, பக்கம் 263

No comments:

Post a Comment