தமிழரின் நெஞ்சைக் காட்டும், வாழ்வியலை விளக்கும், புதிய புதிய சொற்றொடர் பூக்கும் 300+ நூல், 30,000+ பாடல் - விளக்கம்
Pages
▼
Thursday, 9 October 2025
அறி (தொழிற்பெயர்)
அறிவன் - அறி வ் அன்
அறிவாக இயங்கும் இறைவனின் அடிகளைத் தொழ வேண்டும்.
கற்றதனால் ஆய பயன் என்-கொல் வால்_அறிவன் நல் தாள் தொழாஅர் எனின்
அறிகல்லாதவர் - அறி (அறிகு) அல்லாதவர்
நடக்கப்போவதை அறிய முடியாதவர் அறிவு இல்லாதவர்
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் அஃது அறிகல்லாதவர்
அறிகிலார் - அறி (ஆறிகு) இலார்
அவனோடு நான் கொண்டிருக்கும் உறவு மற்றவருக்குத் தெரியாது என்று நினைத்துக்கொண்டு தெருவுக்கே வந்து பகட்டிக்கொள்கிறது.
அறிகிலார் எல்லாரும் என்றே என் காமம் மறுகில் மறுகும் மருண்டு
அறியாமை (அறி ஆ மை) எதிர்மறை வினை
ஒருவன் தான் விரும்புவதைப் பிறர் அறியாமல் செயல்படுத்தினால், அதனைத் தடுக்கப் பிறர் செய்யும் சூழ்ச்சி (நூல்) செல்லுபடி ஆகாது.
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல்
ஒருவன் தன் கைத்திறனை அறியாமல், காசு கொடுத்துக் கள்ளை வாங்கி உண்டு, தன் உடம்பை ஒருவன் மறந்து செயல்படுவது அவனது அறியாமையால் நிகழ்கிறது.
கை அறியாமை உடைத்தே பொருள் கொடுத்து மெய் அறியாமை கொளல்
ஒருவன் ஒன்றை அறியும்போது, அறியவேண்டியது இன்னும் இருப்பதை உணர்கிறான். அதுபோல, காமம் துய்க்கும் ஒருவர் துய்க்கவேண்டிய இன்பம் இன்னும் இருப்பதை அறிகிறார்.
அறி-தோறு அறியாமை கண்டு அற்றால் காமம் செறி-தோறும் சே_இழை-மாட்டு
அறிவாண்மை (அறிவு ஆளுமை)
வாலறிவு பற்றிக் கண்டோம். இங்குச் சொல்லப்படுவது அதற்கு எதிர்மறையான காரறிவு. இது இருள்அறிவு. பொருள் இருளில் கண்ணுக்குப் புலப்படாது. அதுபோலத் திருட்டுத்தனத்துக்கு நல்ல செயல் எது என்று புலப்படாது. திருடுதலை வள்ளுவர் கார்அறிவு என்று குறிப்பிடுகிறார்.
களவு என்னும் கார் அறிவாண்மை அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்-கண் இல்
அறிவுடையார்-கண்ணும் (அறிவு உடையார்)
தலைவன் பொருள் தேடுவதற்காகப் பிரியத்தான் வேண்டியிருக்கும். இதனைத் தலைவி நினைத்துப் பார்க்கிறாள்.
அரிது அரோ தேற்றம் அறிவுடையார்-கண்ணும் பிரிவு ஓர் இடத்து உண்மையான்
அறிவுடையான் (அறிவு உடையான்)
ஒருவனுக்குத் துன்பம் வெள்ளம் போன்று பெருக்கெடுத்து வந்தாலும், அவன் அறிவுடையவனாக இருந்தால், நினைத்த மாத்திரத்திலேயை அவனால் அந்தத் துன்பத்தைப் போக்கிக்கொள்ள முடியும்.
வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ள கெடும்
அறிவும்
உழைப்பு, அறிவு ஆகிய இரண்டும் தொடர்ந்து செயல்பட்டால் குடும்பம் உயரும்.
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் நீள் வினையான் நீளும் குடி
No comments:
Post a Comment