Pages

Wednesday, 8 October 2025

பெயர், வினை, இடை, உரி

தமிழில் உள்ள சில அடிப்படை இலக்கணத் தொடர்களைப் புரிந்துகொள்வோம். 
தமிழ் வல்லுநர்கள் சிலர் இந்தத் தொடர்களை உருவாக்கித் தந்துள்ளனர். 

பெயர், வினை என்று சொற்கள் இரண்டு வகைப்படும். 
செயல் காலம் காட்டும். 
காலம் காட்டும் சொல் வினைச்சொல்
காலம் காட்டாமல் ஒரு பொருளைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல்

பெயர்ச்சொல்


மரம்
வயல்
இன்று
கையில் விரல், விரலில் நகம், நகத்தின் நுனி
சினம்
சிரிப்பு
ஆகியவை ஆறு வகைப் பெயர்ச்சொற்கள்.
இவை எந்தப் காலத்தையும் காட்டவில்லை. 
வயலை அளந்தான், வயலுடன் வீடி, வயலுக்குச் சென்றான், வயலிலிருந்து வந்தான், வயலது பரப்பு, வயலில் நெல் - என்று ஐ, உடன், கு, இல்லிருந்து, அது, இல் - என்னும்  வேற்றுமை உருபுகள் சேர்கின்றன. 
பெயர்கள் வேற்றுமை உருபுகள் சேர இடம் கொடுக்கின்றன.  

வினைச்சொல்


வினை செயல் 
செயப்படுபொருள் குன்றிய வினை
செயப்படுபொருள் குன்றா வினை
என்று இது இரண்டு வகைப்படும். 

நடந்தான்
இது எழுவாயின் செயல் 
இதனைச் செயப்படுபொருள் குன்றிய வினை என்பர். 

கொடுத்தான்
கொடை கொடுத்தான் 
இது கொடை என்னும் செயப்படு பொருளைக் கொண்டுள்ளது. 
இது செயப்படுபொருள் குன்றா வினை

நடந்தான், கொடுத்தான் என்னும் வினைகள் காலம் காட்டுகின்றன. 
வினைசொல் வேற்றுமை உருபு ஏற்காது. 
நடந்தான், கொடுத்தான் என்னும் வினைசொற்கள் பெயராக மாறி நடந்தானை, கொடுத்தானை என்று வேற்றுமை உருபு ஏற்கும். இவற்றை வினையாலணையும் பெயர் என்பர்

இடைச்சொல்


இவை இரண்டும் அல்லாமல் இந்த இரண்டு சொற்களோடும் இடையிலோ, கடையிலோ ஒட்டிக்கொண்டோ, ஒட்டாமலோ இடையே வரும் சொல் இடைச்சொல்

பற்றற்றகண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும் (திருக்குறள்)

இதில் மற்று என்பது எந்தச் சொல்லோடும் ஒட்டாமல் வந்த இடைச்சொல்.

கண்ணே என்பது பற்றற்ற என்னும் சொல்லோடு ஒட்டிக்கொண்டிருக்கும் இடைச்சொல். இது ஏழாம் வேற்றுமை உருபு. 

அவனா வந்தான்
அவனோ வந்நதான்
இவற்றில் ஆ ஓ வினாப் பொருளை உணர்த்ததும் இடைச்சொல். 

உரிச்சொல்


பெயருக்கோ, வினைக்கோ உரிமை பூண்டதாய், அவற்றை உணர்த்தும் அடைமொழிகளாய், அவற்றிற்கு முதலில் செய்யுளில் வருவன உரிச்சொல்.

இந்த உரிச்சொற்களில் ஒரு சொல் பல பொருள்களுக்கு உரிமை பூண்டதாகவும், பல சொற்கள் ஒரு பொருளுக்கு உரிமை பூண்டதாகவும் இருப்பதால், இதனை உரிச்சொல் என்கிறோம். 

No comments:

Post a Comment