Pages

Tuesday, 7 October 2025

நாம்

உனக்கு மூளை இருக்கிறதா - என்று கேட்கின்றனர். 
அறிவு இருக்கிறதா என்பது இதன் பொருள். 
வள்ளுவர் இதனை [அறிவு] என்கிறார்.
வாலறிவன் 

உனக்கு இதயம் இருக்கிறதா - என்று கேட்கின்றனர்
நெஞ்சில் ஈரம் இருக்கிறதா - என்பது இதன் பொருள். 
வள்ளுவர் இதனை [மலர்] என்கிறார்.
மலர்மிசை ஏகினான்

இறைவன் நமக்குள் இருக்கிறான். இறைவனை நாம் நினைக்கிறோம். அதனால்  இறைவனும் நாமும் ஒன்று. இதனை இரண்டற்றது (அத்+துவைதம்) என்று சங்கரர் கண்டார். வள்ளுவர் இதனை ஆதி-பகன் என்றார். 

மத்துவர் இதனை இரட்டையம் (துவைதம்) என்றார்.  உயிர்-உடல், காலம்-இடம், எண்ணம்-செயல், அம்மை-அப்பன் என உணர்ந்துகொள்கிறோம். 

இராமானுசர் இதனை மும்மை (விசிட்டாத்துவைதம்) என்றார். ஒன்றாகவும், இரண்டாகவும், மூன்றுமாவும் இருக்கும் நிலைகளே மும்மை. காலம், பொருள், இவற்றின் இயக்கம் என்பன இந்த மும்மை நிலை. நீ வேறு. நான் வேறு. இருவரும் அல்லது பலரும் ஒன்றுபட்டுச் செயலாற்றும் நிலை வேறு. இவையே மும்மைநிலை. 

No comments:

Post a Comment