அறிவு எப்படிப்பட்டது, அறிவு என்பது ஒருவருக்குக் கிடைத்திருக்கும் பேறு, அறிவோடு யார் யாருக்கு என்ன என்ன சேர்ந்திருக்க வேண்டும் - என்பனவற்றை வள்ளுவர் விளக்கியுள்ளார்.
Valluvar has explained what knowledge is, what a blessing one has, and what should be associated with knowledge.
ஒருவரிடம் இருக்கும் அறிவைப் மற்றவர்களால் அழிக்க முடியாது. அது அவரை அழிவிலிருந்து காப்பாற்றும்.
The knowledge that a person possesses cannot be destroyed by others. It will save him from destruction.அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள் அழிக்கல் ஆகா அரண்
அறிவுள்ள பிள்ளைகள் பிறந்திருந்தால் ஒருவர் பெறவேண்டிய செல்வம் அவர்களை விட வேறு எதுவும் இல்லை.
There is no greater wealth than having intelligent children.பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த மக்கள் பேறு அல்ல பிற
அரசனிடம் அறிவோடு சேர்ந்து ஊக்கம், அஞ்சாமை, ஈகை ஆகிய குணங்களும் இருக்க வேண்டும்.
Along with knowledge, a king should also possess the qualities of courage, fearlessness, and generosity.அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இ நான்கும் எஞ்சாமை வேந்தற்கு இயல்பு
அரசன் தன் கடமைகளைச் செய்ய ஒப்படைப்பவனிடம் அறிவோடு, அரசன்மீது அன்பு, தெளிவு, ஆசை இல்லாமை ஆகிய பண்புகளும் இருக்க வெண்டும்.
The one whom the king entrusts to perform his duties should possess, in addition to knowledge, the qualities of love for the king, clarity, and lack of desire.அன்பு அறிவு தேற்றம் அவா இன்மை இ நான்கும் நன்கு உடையான்-கட்டே தெளிவு
அரசனுக்காகத் தூது செல்பவனிடம் அறிவாடு, அரசன்மீது அன்பு, சொல்லாற்றல் ஆகிய பண்புகளும் நிறைந்திருக்க வேண்டும்.
A messenger on behalf of the king should be knowledgeable, have love for the king, and be eloquent.அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூது உரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று
தூது செல்பவனிடம் அறிவும், உருவத் தோற்றமும், ஆய்ந்துணர்ந்த கல்வி-நலம் ஆகியனவும் இருக்க வெண்டும்.
The messenger should have knowledge, good looks, and a well-developed education and well-being.அறிவு உரு ஆராய்ந்த கல்வி இ மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு
No comments:
Post a Comment