Pages

Monday, 13 October 2025

அறியும்

இது சொல்லாட்சி அடிப்படையில் தொகுக்கப்பட்ட கட்டுரைத் தொகுப்பு.


அறியும் 

  • பெண்ணின்பத்தில் ஐந்து புலன்களின் இன்பமும் பொதிந்து கிடக்கின்றன. 
  • கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் ஒண்_தொடி கண்ணே உள

  • இவள் நொந்துகொண்டிருக்கிருக்கிறாள் என்று உணரக்கூடிய காதலன் இல்லாதபோது அவள் தன் மனத்தை வருத்திக்கொள்வதால் என்ன பயன்? 
  • நோதல் எவன் மற்று நொந்தார் என்று அஃது அறியும் காதலர் இல்லா வழி

அறியேன்

  • களித்தல் - கள் உண்டு தள்ளாடுதல்
  • கள் உண்டு தள்ளாடியவன் தான் எப்போதும் கள் உண்டதில்லை என்று கூறுதல் கூடாது. 
  • அவன் முன்பு உண்டதை மறைப்பது பலருக்குத் தெரியும். 
  • களித்து அறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்

  • எமனை இதற்கு முன் நான் பார்த்ததில்லை.
  • இவள் என்னைப் பார்க்கும் பார்வையில் எமனை இப்போது நான் பார்க்கிறேன். 
  • பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன் பெண் தகையான் பேர் அமர் கட்டு

  • நான் நினைத்துக்கொண்டே இருக்கிறேன். மறக்க முயல்கிறேன். என் காதலி என்மீது காட்டிய அன்பினை மறக்க முடியவில்லை. 
  • உள்ளுவன்-மன் யான் மறப்பின் மறப்பு அறியேன் ஒள் அமர்_கண்ணாள் குணம் 

  • அவளை நினைத்துக்கொண்டிருக்கும்போதே என் என் உள்ளம் என்னைச் சுடுகிறது. மறந்துவிட்டால் என்ன ஆவேன் என்று எனக்கே தெரியவில்லை. 
  • மறப்பின் எவன் ஆவன்-மன்-கொல் மறப்பு அறியேன் உள்ளினும் உள்ளம் சுடும் 

அறிவது 

  • எனக்குத் தெரிந்த அளவில் ஒருவன் பெறும் பேறுகளில் அறிவார்ந்த பிள்ளைகளைப் பெற்றிருப்பது போன்ற பேறு வேறு எதுவும் இல்லை. 
  • பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த மக்கள் பேறு அல்ல பிற 

  • நீ சொல்வது பொய் என்று உனக்கே தெரிந்ததை நீ சொல்லாதே. சொன்னால், உன் நெஞ்சே உன்னைச் சுட்டுக்கொண்டிருக்கும். 
  • தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின் தன் நெஞ்சே தன்னை சுடும் 

  • தன்னால் எது முடியும் என்று தெரிந்துகொண்டு அதனை நினைத்துச் செயலாற்றுபவர்க்கு செல்லுபடியாகி நிறைவேறாதது எடுவும் இல்லை. 
  • ஒல்வது அறிவது அறிந்து அதன்-கண் தங்கி செல்வார்க்கு செல்லாதது இல்

  • கற்றறிந்து அஞ்சாமல் அரசன் சொன்னதைத் தக்க காலத்தில் எடுத்துரைத்து விளைவைக் கண்டறிவதே தூதுரைப்பதன் தன்மை ஆகும். 
  • கற்று கண் அஞ்சான் செல சொல்லி காலத்தால் தக்கது அறிவது ஆம் தூது 

  • சினம் கொண்டவர் பின்னே செல்லாமல் இருக்கும் பெருந்தகைமை காமநோய் உள்ளவருக்குத் தெரியாது. 
  • செற்றார் பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவது ஒன்று அன்று 

அறிவல் 

  • கண்ணுக்குள் இருக்கும் காதலர் மறைவார் என அறிந்து கண்ணை இமைக்காமல் இருக்கின்றேன்; அதற்கே இந்த ஊர் தூக்கமில்லாத துன்பத்தை எனக்குத் தந்த அன்பில்லாதவர் என்று அவரைக் கூறும். 
  • இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே ஏதிலர் என்னும் இவ் ஊர் 

அறிவாம் 

  • சாகும்போது செய்யலாம் என்று எண்ணாமல் இப்போதே கொடை நல்கல் சாகும்போது துன்பம் இல்லா இன்பம் தரும். 
  • அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது பொன்றுங்கால் பொன்றாத் துணை 

அறிவார் 

  • செயலின் விளைவை அறிய வல்லவர் அறிவுடையார். அதனை அறிந்துகொள்ள விரும்பாதவர் அறிவில்லாதவர். 
  • அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் அஃது அறிகல்லாதவர் 

  • அஞ்ச வேண்டிய செயலை அஞ்சாமல் செய்வது முட்டாள்தனம். அஞ்சவேண்டிய செயலுக்கு அஞ்சிச் செய்யாமல் இருப்பது அறிவுடையா செயல். 
  • அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் 

  • தன்னிடம் இருப்பதை மறைக்காமல் கொடுக்கும் உள்ளம் கொண்டவரிடம் பிச்சை வாங்குவதிலும் ஒரு பெருமை இருக்கிறது. 
  • கரப்பு இலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து

அறிவார்-மாட்டு

  • வேடிக்கைக்காக இருந்தாலும் ஒருவரை இகழ்ந்து பேசுதல் கொடுமை. பண்பு அறிந்தவர் பகைவரிடமும் பண்பைக் காண்பர். 
  • நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் பண்பு உள பாடு அறிவார்

அறிவாரின் 

  • நல்லது தெரிந்தவர் தீமை செய்ய அஞ்சுவர். கயவர் எதையும் செய்வர். இந்த வகையில் கயவர் ஒருவகைச் செல்வம் படைத்தவர். 
  • நன்று அறிவாரின் கயவர் திரு உடையர் நெஞ்சத்து அவலம் இலர் 

அறிவான் 

  • தனக்கும் பிறருக்கும் ஒத்தது எது என அறிந்து நடந்துகொள்பவன் உயிரோடு வாழ்பவனாகக் கருதப்படுவான். இப்படி வாழாதவன் சேத்தவனாகக் கருதப்படுவான்.  
  • ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் 

  • தன் உயிருக்குத் துன்பம் தரும் செயல் என்று தான் அறிந்திருக்கும் செயலை பிற உயிரிக்கு ஒருவன் ஏன் செய்கிறானோ தெரியவில்லை. 
  • தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்-கொலோ மன் உயிர்க்கு இன்னா செயல் 

  • ஒரு செயலைச் செய்பவன் அதனைச் செய்யும் முறைமையை முன்பே செய்து முடித்தவன் பாங்கை மனத்தில் கொள்ள வேண்டும். 
  • செய் வினை செய்வான் செயல் முறை அ வினை உள் அறிவான் உள்ளம் கொளல் 

அறிவிப்ப 

  • என் காதலனைத் தழுவும்போது பருத்த என் தோள் மெலிந்து அவன் என்னிடம் இல்லாததை தெரிவிக்கின்றன போலும். 
  • தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்த நாள் வீங்கிய தோள் 

அறிவிலா 

  • அறிவில்லாதவனாகவும், அஞ்சுபவனாகவும் இருக்கும் ஒருவன் தனக்குப் பகைவனாக வாய்க்கப் பெற்றால் போரிடுபவனுக்கு இன்பம் தொலைவில் இல்லை. 
  • செறுவார்க்கு சேண் இகவா இன்பம் அறிவிலா அஞ்சும் பகைவர் பெறின் 

அறிவிலாதார் 

  • பலவற்றைக் கற்றிருந்தாலும், உலகத்தோடு ஒத்துப்போகத் தெரியாதவன் அறிவில்லாதவன் ஆவான். 
  • உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் கல்லார் அறிவிலாதார் 

அறிவிலார் 

  • செயலின் விளைவை அறிபவர் அறிவுடையவர். அறியாதவர் அறிவில்லாதவர். 
  • அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் அஃது அறிகல்லாதவர் 

  • அறிவுடையார் எல்லாம் உடையவர். அறிவு இல்லாதவர் வேறு எதனைப் பெற்றிருந்தாலும் இல்லாதவரே ஆவார். 
  • அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என் உடையரேனும் இலர் 

  • அறிவில்லாதவர் தன்னை ஒதுக்கி வைத்துக்கொள்ளும் செயலை, அவரது பகைவராலும் அவருக்குச் செய்ய முடியாது. 
  • அறிவிலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது 

அறிவிலான் 

  • அறிவு இல்லாதவன் மனம் விரும்பிக் கொடை நல்குவானே ஆனால் அந்தக் கொடை அவன் விரும்பித் தந்த கொடை அன்று. அது பெற்றுக்கொள்பவன் செய்த தவப்பேறு. 
  • அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாதும் இல்லை பெறுவான் தவம் 

  • மறைக்க வேண்டுவனவற்றை மறைக்காமல் பிறரிடம் சொல்பவன் தனக்குத் தானே துன்பம் செய்துகொள்வன் ஆவான். 
  • அரு மறை சோரும் அறிவிலான் செய்யும் பெரும் மிறை தானே தமக்கு 

அறிவின்மை 

  • அறிவு இல்லாமையே வறுமையாகக் கொள்ளப்படும்.  வேறு எது இல்லாவிட்டாலும் அது இல்லாமையாகக் கருதப்படாது. 
  • அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிது இன்மை இன்மையா வையாது உலகு 

அறிவினான்(ல்) (3ஆம் வேற்றுமை)

  • பிற உயிரினங்களின் நோயைத் தன் நோயைப் போலப் போற்றாத அறிவு இருப்பதால் என்ன பயன்? 
  • அறிவினான் ஆவது உண்டோ பிறிதின் நோய் தம் நோய் போல் போற்றாக்கடை

அறிவினுள் (7ஆம் வேற்றுமை)

  • தீமை செய்பவருக்கும் தீமை செய்யாமல் இருக்கும் அறிவு மற்ற அறிவுகள் எல்லாவற்றிலும் மேலானது. 
  • அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல் 

அறிவினை (2ஆம் வேற்றுமை)

  • நாள்தோறும் வாட்டும் வறுமை அறிவினைக் கொல்லும். அதுபோலக் கடமையில் சோர்தல் புகழைக் கெடுக்கும். 
  • பொச்சாப்பு கொல்லும் புகழை அறிவினை நிச்சம் நிரப்பு கொன்றாங்கு

அறிவுடைமை 

  • ஒருவர் பெற்ற பிள்ளைகள் அவரைக் காட்டிலும் அறிவுடையவராக விளங்குதல் உலகில் வாழ்பவருக்கெல்லாம் இன்பம் பயக்கும். 
  • தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து மன் உயிர்க்கு எல்லாம் இனிது

அறிவுடையார் 

  • பேராசை கொள்ளாமல் இருத்தல் அறம் எனத் தெரிந்துகொண்டு வாழ்பவரைச் செல்பவரிடம் செல்வம் வந்து சேரும். 
  • அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் சேரும் திறன் அறிந்து ஆங்கே திரு

  • கல்வி அறிவு இல்லாதவன் அறிவு நுட்பமானதாக இருந்தாலும் கற்றறிந்தார் ஏற்றுக்கொள்ள மாட்டார். 
  • கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும் கொள்ளார் அறிவுடையார்

  • தம்மால் இதுதான் செய்ய முடியும் என்பதை அறிவுடையார் அறிவர். அறிவில்லாதவருக்கு அது தெரியாது. 
  • அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் அஃது அறிகல்லாதவர்

  • அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என் உடையரேனும் இலர்

  • அறநெறியை அறிந்து அகவையில் மூத்திருக்கும் அறிவுடையார் பெரியார் ஆவார். அவரின் திறமையைத் தெரிந்துகொண்டு அவரை அரசன் தன் நண்பராக  ஆக்கிக்கொள்ள வேண்டும். 
  • அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறன் அறிந்து தேர்ந்து கொளல்

  • செல்வத்தைப் பெருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருக்கும் முதலையே இழக்கக்கூடிய செயல்களை அறிவுடையவர் மேற்கொள்ளக் கூடாது. 
  • ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய் வினை ஊக்கார் அறிவுடையார்

  • அறிவில்லாப் பேதையை நண்பராகப் பெற்றிருப்பதை விட அறிவுடையார் நண்பராக இல்லாவிட்டாலும், அருகில் இருத்தல் பல கோடி நன்மைகளை விளைவிக்கும். 
  • பேதை பெரும் கெழீஇ நட்பின் அறிவுடையார்   ஏதின்மை கோடி உறும் 

No comments:

Post a Comment