Pages

Saturday, 13 September 2025

ஒட்டிப் பாடியதால் ஒட்டக்கூத்தன்

கூத்தருக்கு ‘ஒட்டக்கூத்தர்’ என்னும் பெயர் எப்படி வந்தது?


ஒட்டக்கூத்தர் தாம் பாடிய விக்கிரம சோழன் உலா நூலை அரங்கேற்றிக் கொண்டிருந்தார். 

அதில் 
கையும் மலரடியும் கண்ணும் கனிவாயும்
செய்ய கரிய திருமாலை
என்று கூறும் ஒரு கண்ணி (154) வந்தது. 

கேட்டுக்கொண்டிருந்த அந்தச் சோழன்,
இந்தக் ஒட்டி ஒரு பாடல் பாடுக
என்று புலவரை வேண்டினான். 

புலவர் பாடினார். 

கையும் மலரடியும் கண்ணும் கனிவாயும்
செய்ய கரிய திருமாலே - வையம்
அளந்தாய் அகளங்கா, ஆலிலை மேல் பள்ளி
வளர்ந்தாய், தளர்ந்தான் என் மான். 

இப்பாடலில் பின் இரண்டு அடிகளும் ஒட்டிப் பாடியவை. 

இப்படி ஒட்டிப் பாடியதால் ‘ஒட்ட’ என்னும் அடைமொழி பெற்றான் என்று கூறுவர். 

மற்றொரு விளக்கம்


ஒட்டம் என்றால் பந்தயம். 
பந்தயம் கட்டிக்கொண்டு பாடல்க்களைப் பாடிய புலவன் ‘ஒட்டன்’ எனப்பட்டான் எனச் சிலர் விளக்கம் கூறுவர். 

மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 
12 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், பக்கம் 260

No comments:

Post a Comment