- கிடங்கில் நடக்கும் போர் பற்றிக் கூறுவது பாசி நிலை என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
நாவாயும் தோணியும் மேற்கொண்டு நள்ளாதார்
ஓவார் விலங்கி உடலவும் - பூவார்
அகழி பரந்து ஒழுகும் அம் குருதிச் சேற்று
பகழி வாய் வீழ்ந்தார் பலர்.
- ஓடம், ஒருமரத் தோணி ஆகியவற்றில் சென்று போரிட்டனர். பூக்கள் நிறைந்த நீரில் குருதிச் சேறு பாயும்படி அம்பு பாய்ந்து பலர் வீழ்ந்தனர்.
உழிஞைப்படலம் / உழிஞைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 83
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment