- காவல் காடு என்னும் என்னும் காட்டரணைக் கடந்து சென்று அகழி அரணின் புறத்தே தங்குவது பற்றிக் கூறுவது புறத்து உழிஞை என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
கோள் வாய் முதலைய குண்டு அகழி நீராக
வாள் வாய் மற வேந்தன் வந்து இறுத்தான் - நீள் வாயில்
ஓங்கல் அரணத்து ஒளி வளையார் வெய்து உயிர்ப்ப
ஆல் கொல் அரிய அமர்
- முதலை இருக்கும் ஆழமான அகழியின் புறத்தே போர் வீரர்கள் வந்து தங்கியுள்ளனர். போர் மூளப்போகிறதோ என்று பெண்கள் பெருமூச்சு விடுகின்றனர்.
உழிஞைப்படலம் / உழிஞைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 83
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment