மதில் காப்போரின் நிலையினைச் சொல்லுதலும்
முது உழிஞை என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
அறியார் வயவர் அகத்து இழிந்த பின்னும்
நெறியார் நெடுமதில் நேரார் - மறியாம்
கிளியொடு நேராம் கிளவியார் வாள் கண்
களியுறு காமம் கலந்து.
உழிஞை வீரர்கள் மதிலைக் கடந்து உள்ளே நுழைந்ததை அறியாமல் நொச்சி வீரர்கள் மகளிரொடு காம இன்பம் கண்டுகொண்டிருந்தனர்.
மகளிர்மான் போன்றவர்கிளி மொழியர்வாள் போன்ற கண்ணர்
உழிஞைப்படலம் / உழிஞைத்திணை
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 85
பாடல் - சொல் பிரிப்பு
புதுப்புது சொற்றொடர்
No comments:
Post a Comment