Pages

Sunday, 23 March 2025

ஏவல் வினைமுற்று || வியங்கோள் வினைமுற்று

ஏவல் வினைமுற்று  
  • ஒன்றைச் செய் எனக் கட்டளேயிடுவதாக வரும் வினைமுற்று ஏவல்வினை முற்று எனப்படும். 
  • இ, ஆய் என்ற ஒருமை விகுதிகளையும் மின், உம், கள் என்ற பன்மை விகுதி களையும் பெற்றுவரும். 
  • உதாரணம் - உண், உண்பாய். 

வியங்கோள் வினைமுற்று 
  • இஃது ஏவல்போல் அன்றி வேண்டிக் கொள்ளும் முறையில் வருகின்ற வினைமுற்று. 
  • க, இய, இயர் என்னும் விகுதிகளைப்பெற்று வரும். 
உண்க. ஏவலுக்கும் வியங்கோளுக்கும் உள்ள வேறுபாடுகள் : 

ஏவல்
  • 1. முன்னிலையில் மட்டும் வரும். -" "
  • 2. ஒருமை பன்மை வேறுபாடு உண்டு. 
  • 3. கட்டளைப்பொருளில் மட்டுமே வரும். 
வியங்கோள்
  • 1. இருதிணை ஐம்பால் மூன்றிடங்களிலும் வரும். 
  • 2. ஒருமை பன்மை வேறுபாடில்லை. 
  • 3. வாழ்த்தல், வைதல், வேண்டுதல் முதலிய பல பொருளில் வரும். 
தமிழ் மொழி அமைந்திருக்கும் பாங்கை உணர்த்தும் பகுதி.
A section that reflects the style in which the Tamil language is situated.

No comments:

Post a Comment