Pages

Monday, 12 July 2021

தொல்காப்பியச் சூத்திர விருத்தி Tolkappiyam Payiraviruthi 13

வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய - என்னும் தொல்காப்பிய நூற்பாவுக்கு நச்சினார்க்கினியார் உரை பொருந்தாது என விளக்குகிறார் \\ 11

பொருளி அதிகாரம் பெரும்பாலும் காமச் சுவையும், வீரச் சுவையும் கொண்டுள்ளோன் கூற்றாக அமைந்துள்ளதால் நாடகத் தமிழ் கூறினார் எனக் கொள்ளலாமா என்னும் வினாவினை எழுப்பிக்கொண்டு, கொள்ளக் கூடாது என மறுத்துக் கூறுகிறார் \\ 12

நாடகத் தமிழில் 

  • கூத்து
  • அவிநயம்
  • தோரிய மகளிர்
  • தலைக்கோல்
  • ஆடலாசிரின்
  • ஆடலரங்கு
போன்றவை கூறப்படும் என்கிறார் \\ 12

அகத்தியம் இயல் இசை நாடகம் மூன்றையும் கூறும் நூல் \\ 12

இந்திரன் செய்த ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் - என்று பாயிரம் தெரிவிக்கிறது. பாணினீயம் பற்றிக் கூறவில்லை. இதனைச் சுட்டிக் காட்டித் தொல்காப்பியர் காலத்தைப் பாணினிக்கு முந்தியது எனத் தெளிவாக்குகிறார் \\ 13





சிவஞான சுவாமிகள் இயற்றிய
தொல்காப்பியச் சூத்திர விருத்தி


No comments:

Post a Comment