பரிதி, மதியம் இரண்டையும் பூண்டிருக்கிறான் (சங்கு, சக்கரம்)
பல சுடர்களை வாயில் கொண்டுள்ளான் (பல் - விண்மீன்கள்)
பச்சை நிற மரகதமணிக் குன்றமாக விளங்குகிறான்.
கடலோனின் கையில் கண்வளர்வது போல் காணப்படுகிறான்
பட்டாடை, அரசுமுடி முதலான பல அணிகலன்களை அணிந்துள்ளான்
வாயிலும் கண்ணிலும் செவ்வொளி வீடுகின்றன
நஞ்சு மிக்க பாம்பணை மீது ஏறி
அலை வீசும் கடல் நடுவில்
அறிதுயில் கொண்டுள்ளான்
சிவன், அயன், இந்திரன் முதலான தெய்வ கணத்தார் தொழுகின்றனர்
அவன் தாமரை உந்து கொண்ட தனிப்பெரு நாயகன்
மூவுலகையும் அளந்த சேவடி கொண்டவன்.
செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்
பரிதிசூடி, அஞ்சுடர் மதியம் பூண்டு
பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய்
திகழ்பசுஞ் சோதி மரகதக் குன்றம்
கடலோன் கைமிசைக் கண்வளர் வதுபோல்
பீதக ஆடை முடிபூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து, சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப, மீதிட்டுப்
பச்சை மேனி மிகப்ப கைப்ப
நச்சுவினைக் கவர்தலை அரவினமளி யேறி
எறிகடல்நடுவுள் அறிதுயில் அமர்ந்து
சிவனிய னிந்திரன் இவர்முத லனைத்தோர்
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த
தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக
மூவுல களந்த சேவடி யோயே.
திருவாசிரியம் (திரு ஆசிரியம்)
நம்மாழ்வார் இயற்றியது
No comments:
Post a Comment