Pages

Friday, 13 November 2020

பெரிய திருவந்தாதி Periya-Tiruvantati

முயன்று சுமந்துகொண்டு எழுந்து முந்துகின்ற நெஞ்சே! 
எம்மோடு நீ கூடி 
எல்லாரும் விர்ரும்பும் 
நாவில் பிறக்கும் தொடைப்பாடல்களைப் பொதித்து வை. 
காயாம்பூ வண்ணன் புகழாக அது இருக்கட்டும்.   

முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே,
இயற்றுவாய் எம்மொடுநீ கூடி,-நயப்புடைய
நாவீன் தொடைக்கிளவி யுள்பொதிவோம், நற்பூவைப்
பூவீன்ற வண்ணன் புகழ்

பெரிய திருவந்தாதி 
நம்மாழ்வார் இயற்றியது 

இதில் 87 வெண்பாக்கள் உள்ளன - காண்க

காயாம்பூ 
இந்தப் பூவின் நிறம் கொண்டவன் திருமால் 


No comments:

Post a Comment