பத நம்புறு
காரிகைநீ என்னுடனே காணவரு வாயோ
கனகசபை நடுநின்ற கணவர்வடி வழகை
ஏரிகவாத் திருவடிவை எண்ணமுடி யாதேல்
இயம்பமுடிந் திடுமோநாம் எழுதமுடிந் திடுமோ
பேரிகவா மறைகளுடன் ஆகமங்கள் எல்லாம்
பின்னதுமுன் முன்னதுபின் பின்முன்னா மயங்கிப்
பாரிகவா தின்றளவும் மிகஎழுதி எழுதிப்
பார்க்கின்ற முடிவொன்றும் பார்த்தநிலை அம்மா.
சிவம்எ னும்பெயர்க் கிலக்கியம் ஆகிஎச் செயலும்தன் சமுகத்தே
நவநி றைந்தபேர் இறைவர்கள் இயற்றிட ஞானமா மணிமன்றில்
தவநி றைந்தவர் போற்றிட ஆனந்தத் தனிநடம் புரிகின்றான்
எவன்அ வன்திரு வாணைஈ திசைத்தனன் இனித்துய ரடையேனே.
ஐயன்அருள் வருகின்ற தருணம்இது கண்டீர்
ஐயமிலை ஐயமிலை ஐயன்அடி ஆணை
மெய்யன்எனை ஆட்கொண்ட வித்தகன்சிற் சபையில்
விளங்குகின்ற சித்தன்எலாம் வல்லஒரு விமலன்
துய்யன்அருட் பெருஞ்சோதி துரியநட நாதன்
சுகஅமுதன் என்னுடயை துரைஅமர்ந்திங் கிருக்க
வையமிசைத் திருக்கோயில் அலங்கரிமின் விரைந்தே
மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே.
ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
ஜோதி ஜோதி ஜோதி பரஞ்
ஜோதி ஜோதி ஜோதி யருட்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்.
திருவருட்பா (திரு அருள் பா)
இராமலிங்க அடிகள் (அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1874) இயற்றியது
ஆறாம் திருமுறை முற்றும்
No comments:
Post a Comment