தம்குறுவம்பு மங்கநிரம்பு சங்கம்இயம்பும் நம்கொழுகொம்பு
சங்கரசம்பு சங்கரசம்பு சங்கரசம்பு சங்கரசம்பு.
தம் கங்கைநீர் (அம்பு) மங்க, சங்கு ஊதும், நம் கொழுகொம்பு (ஊன்றுகோல்) ஆகி விளங்கும் சங்கரசம்பு (சங்கரனாகிய சம்பம்புல்)
139
140
141
அரைசே குருவே அமுதே சிவமே
அணியே மணியே அருளே பொருளே
அந்தோ வந்தாள் எந்தாய் எந்தாய் அம்பல நம்பதி யே. --- (வந்து ஆள்)
பசியாத அமுதே பகையாத பதியே
பகராத நிலையே பறையாத சுகமே --- பறையாத = பறக்காத
நசியாத பொருளே நலியாத உறவே
நடராஜ மணியே நடராஜ மணியே.
நேடிய கீதம் பாடிய பாதம் (நேடு = ஆய்ந்துபார்)
ஆடிய போதம் கூடிய பாதம்
ஆடிய பாதம் ஆடிய பாதம்.
மேதகு மாபொருளே ஓதரும் ஓர்நிலையே
நாத பராபரமே சூத பராவமுதே
ஞான சபாபதியே ஞான சபாபதியே.
திருவருட்பா (திரு அருள் பா)
இராமலிங்க அடிகள் (அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1874) இயற்றியது
No comments:
Post a Comment