Pages

Friday, 26 April 2019

குறுந்தொகை 278 Kurunthogai 278

என் மகளின் காலடி மாந்தளிர் போல் மென்மையானது
தன் காதலனுடன் எப்படி நடந்தே சென்றாளோ

அவள்
தான் விளையாடிய பாவையையோ
என்னையோ
நினைக்கவில்லை

மரத்தில் ஏறிப் பழங்களை ஆண்குரங்கு உதிர்க்கும் 
குட்டியை வைத்திருக்கும் பெண்குரங்கு மரத்தடியில் இருந்துகொண்டு உண்ணும்

இப்படிப்பட்ட மலை வழியில் எப்படி நடந்து சென்றாளோ
அழைத்துச் சென்றவன் கொடியன்

தாய் சொல்லிக் கலங்குகிறாள்



No comments:

Post a Comment