Pages

Friday, 26 April 2019

குறுந்தொகை 274 Kurunthogai 274

உகா என்ன்னும் மரம் புறா முதுகு போன்ற நிறம் கொண்டது
அதன் காய் இறா மீன் போல் இருக்கும்

வழிப்பறி செய்யும் ஆடவர் அதன் கிளை மேல் ஏறி இருந்துகொண்டு அம்பு எய்வர்
அவர்களுக்குத் தண்ணீர்த் தாகம் எடுத்தால்  நீர்ப்பசை உள்ள ஒருவகை நாரை மென்று அதன் சாற்றை உறிஞ்சித் தன் தாகத்தைத் தீர்த்துக் கொள்வர்

உன்னை அழைத்துச் செல்லும் காட்டுவழி அத்துணை வறண்டது
எனினும்
மடந்தையே
உன்னைத் தழுவிக்கொண்டு சென்றால் அது எனக்கு இனியது 

உடன்போக்கு பற்றித் தலைவன் தலைவிக்குத் தெரிவிக்கிறான் 



No comments:

Post a Comment